For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெஜிடேபிள் கதி ரெசிபி

By Neha Mathur
|

இந்திய ரெசிபிக்களில் மிகவும் பிரபலமான ரெசிபிக்களில் ஒன்று தான் கதி ரெசிபி. இந்த ரெசிபியை பலவாறு சமைக்கலாம். அதிலும் இது குளிர்காலம் என்பதால் மார்கெட்டில் நிறைய காய்கறிகள் கிடைக்கும். அப்படி பல்வேறு காய்கறிகளைக் கொண்டு எப்படி கதி செய்வது என்பதைத் தான் பார்க்கப் போகிறோம்.

இவ்வாறு பல்வேறு காய்கறிகளைப் பயன்படுத்துவதால், இது ஒரு ஆரோக்கியமான ரெசிபி என்று கூட சொல்லலாம். சரி, இப்போது அந்த ரெசிபியைப் பார்ப்போமா!

Vegetable Kadhi Recipe

தேவையான பொருட்கள்:

கடலை மாவு - 1/2 கப்
புளித்த தயிர் - 2 கப்
தண்ணீர் - 5-6 கப்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
வரமிளகாய் - 3-4
வெங்காயம் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
பச்சை பட்டாணி - 1/4 கப்
வெண்டைக்காய் - 8 (நறுக்கியது)
காலிஃப்ளவர் - 1/4 கப்
உருளைக்கிழங்கு - 1/4 கப் (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மல்லி தூள் - 2 டீஸ்பூன்

தாளிப்பதற்கு...

எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் தயிரை நன்கு அடித்துக் கொண்டு, பின் அதில் கடலை மாவை கொஞ்சமாக போட்டு கலந்து, வேண்டுமானால் தண்ணீர் சேர்த்து சற்று நீர் போன்று கலந்து கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெந்தயத்தைப் போட்டு தாளித்து, பின் கடுகு, சீரகம், பெருங்காயத் தூள், வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்பு வெங்காயத்தைப் போட்டு 1 நிமிடம் வதக்கி, நறுக்கி வைத்துள்ள காய்கறிகளைப் போட்டு சிறிது நேரம் வதக்க வேண்டும்.

பிறகு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து சிறிது நேரம் கிளறி விட வேண்டும்.

அடுத்து கடலை மாவு கலவையை வாணலியில் ஊற்றி, தீயை குறைவில் வைத்து, 30-40 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்கினால், வெஜிடேபிள் கதி ரெடி!

இறுதியில் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள கடுகு மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளித்து இறக்கி, பின் மிளகாய் தூளை சேர்த்து செய்து வைத்துள்ள கதியில் ஊற்ற வேண்டும். இந்த கதி ரெசிபியானது சாதம் மற்றும் சப்பாத்திக்கு அருமையாக இருக்கும்.

English summary

Vegetable Kadhi Recipe

Kadhi is a popular Indian dish made with chickpea flour and sour yogurt. There are many variations of this delicious dish and today I have made kadhi with lots of vegetables, making it even more healthy and delicious. Here is the recipe.
Story first published: Wednesday, January 1, 2014, 12:56 [IST]
Desktop Bottom Promotion