For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உகாதி ரெசிபி: ஆந்திரா ஸ்டைல் பீர்க்கங்காய் சட்னி

By Babu
|

ஆந்திராவில் பிரபலமாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகை தான் உகாதி. இப்பண்டிகையின் போது ஆந்திராவில் உள்ள அனைத்து வீடுகளிலும் பீர்க்கங்காய் சட்னி செய்யப்படும். இந்த சட்னியை வரும் உகாதிக்கு உங்கள் வீட்டிலும் செய்து சாப்பிடுங்கள்.

இந்த சட்னி செய்வது மிகவும் ஈஸி. இப்போது அந்த பீர்க்கங்காய் சட்னியை ஆந்திரா ஸ்டைலில் எப்படி செய்வதென்று பார்ப்போம்.

Ugadi Recipe: Andhra Beerakaya Chutney

தேவையான பொருட்கள்:

பீர்க்கங்காய் - 2 (நறுக்கியது)
கடலைப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
புளி - 1 சிறிய துண்டு (நீரில் ஊற வைத்தது)
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
கடுகு - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1/2 டேபிள் ஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் பீர்க்கங்காயின் தோலை நீக்கிவிட்டு, பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அதில் பச்சை மிளகாய், பீர்க்கங்காய், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து மிதமான தீயில் 8-10 நிமிடம் வதக்கி, பின் இறக்கி குளிர வைக்க வேண்டும்.

பின்பு ஊற வைத்துள்ள புளியை கரைத்து, நீரை வடித்து தனியாக வைத்துக் கொண்டு, பின் மிக்ஸியில் குளிர வைத்துள்ள பீர்க்கங்காய் கலவையை போட்டு, அதில் புளி நீரை ஊற்றி மென்மையாக அரைத்துக் கொண்டால், பீர்க்கங்காய் சட்னி ரெடி!!!

English summary

Ugadi Recipe: Andhra Beerakaya Chutney

Check out this simple Ugadi recipe of Andhra Beerakaya pachadi and spice up the festival. This is a pachadi recipe made with beerakaya or ridge gourd.
Story first published: Saturday, March 29, 2014, 10:08 [IST]
Desktop Bottom Promotion