For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டோஃபு மக்கானி

By Maha
|

டோஃபு மிகவும் சிறந்த ஒரு உணவுப் பொருள். அதிலும் இதனை சைவ உணவாளர்களுக்கு ஏற்ற ஒரு உணவுப்பொருள் என்றும் சொல்லலாம். ஏனெனில் டோஃபுவில் உடலுக்கு வேண்டிய புரோட்டீனின் அளவு அதிக அளவில் நிறைந்துள்ளது. குறிப்பாக பன்னீருக்கு பதிலாக இதனை சாப்பிடுவது மிகவும் நல்லது. எனவே சைவ உணவாளர்கள், இந்த டோஃபுவை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இப்போது அந்த டோஃபுவை கொண்டு எப்படி எளிமையான முறையில் ஒரு குழம்பு செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

டோஃபு - 250 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது)
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி சாறு - 1/2 கப்
முந்திரி பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
வெல்லம் - 2 டீஸ்பூன் (பொடியாக்கப்பட்டது)
சீரகம் - 1 டீஸ்பூன்
ஏலக்காய் - 3
பட்டை - 1
கிராம்பு - 3
மிளகு - 10
மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி - 2 டீஸ்பூன் (நறுக்கியது)
தண்ணீர் - 1 கப்

செய்முறை:

முதலில் டோஃபுவை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் எலுமிச்சை சாறு, 1 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் மிளகாய் தூள், உப்பு மற்றும் மல்லி தூள் சேர்த்து 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், பட்டை, ஏலக்காய், மிளகு மற்றும் கிராம்பு சேர்த்து, 1 நிமிடம் தீயை குறைவில் வைத்து தாளிக்க வேண்டும்.

பின்பு நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

அடுத்து இஞ்சி பூண்டு பேஸ்ட், முந்திரி பேஸ்ட் சேர்த்து 2-3 நிமிடம் வதக்க வேண்டும்.

பின் நறுக்கிய தக்காளி, தக்காளி சாறு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து 5 நிமிடம் கிளறி விட வேண்டும்.

தக்காளியானது நன்கு வெந்ததும், அடுப்பை அணைத்து இறக்கி குளிரை வைத்து, மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் அரைத்த பேஸ்ட்டை போட்டு, சிறிது தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, கொதிக்க விட வேண்டும்.

குழம்பானது கொதிக்க ஆரம்பித்ததும், அதில் ஊற வைத்துள்ள டோஃபு துண்டுகளைப் போட்டு தீயை குறைவில் வைத்து, பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட்டு இறக்கி, அதன் மேல் நறுக்கிய கொத்தமல்லியைத் தூவினால், சூப்பரான டோஃபு மக்கானி ரெடி!!! இதனை சாதம் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

English summary

Tofu Makhani: Delight For The Vegans!

Tofu is a highly nutritious, protein-rich food made with soya milk. It is a healthy replacement for our regular paneer and the taste is simply delicious. So, try out this exotic vegetarian recipe of tofu makhani and relish your meals with pleasure.
Desktop Bottom Promotion