For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பலாக்காய் குழம்பு

By Babu
|

இதுவரை எத்தனையோ குழம்புகளை வீட்டில் செய்திருப்பீர்கள். ஆனால் பலாக்காய் குழம்பை செய்திருக்கிறீர்களா? ஆம், பலாக்காயை வைத்து குழம்பு செய்யலாம். இந்த குழம்பு அசைவ குழம்பின் சுவையைத் தருவதுடன், வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வண்ணம் இருக்கும்.

மேலும் பலாக்காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. இதனை உணவில் சேர்த்து பார்வை கோளாறை தவிர்க்கலாம். இங்கு பலாக்காய் கொண்டு எப்படி குழம்பு செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் பார்ப்போமா!!!

Tasty Jackfruit Curry Recipe

தேவையான பொருட்கள்:

பலாக்காய் - 250 கிராம் (நறுக்கியது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
தேங்காய் - 1/4 மூடி (துருவியது)
சோம்பு - 1 டீஸ்பூன்
கசகசா - 1/2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மாங்காய் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)

செய்முறை:

முதலில் சுத்தம் செய்து நறுக்கி வைத்துள்ள பலாக்காயை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, லேசாக தண்ணீர் தெளித்து பிரட்டி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

பின் மிக்ஸியில் தேங்காய், சோம்பு, கசகசா மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஊற வைத்துள்ள பலாக்காயை போட்டு 5-7 நிமிடம் பொரித்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, பின் வெங்காயத்தை போட்டு 2-3 நிமிடம் வதக்கி விட வேண்டும்.

பிறகு அத்துடன் தக்காளி சேர்த்து சிறிது நேரம் வதக்கி, அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவை, மிளகாள் தூள், உப்பு, சீரகப் பொடி மற்றும் மாங்காய் தூள் சேர்த்து 3-4 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.

பின் அதில் பொரித்து வைத்துள்ள பலாக்காய் மற்றும் கரம் மசாலா சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மிதமான தீயில் 5-7 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி, கொத்தமல்லியை தூவினால், பலாக்காய் குழம்பு ரெடி!!!

English summary

Tasty Jackfruit Curry Recipe

Spicy jackfruit curry is prepared with a lot of exotic spices which makes this dish difficult to resist. Check out the recipe.
Story first published: Wednesday, April 2, 2014, 11:40 [IST]
Desktop Bottom Promotion