For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீரிழிவு நோயாளிகளுக்கான... சுவையான தால் கபிலா ரெசிபி

By Maha
|

நீரிழிவு நோய் இருந்தால், எந்த உணவையும் சந்தோஷமாக சாப்பிட முடியாது. எதை சாப்பிடுவதாக இருந்தாலும், ஒருமுறைக்கு இரண்டு முறை நன்கு யோசித்து தான் சாப்பிட வேண்டியிருக்கும். ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை, நீரிழிவு நோயாளிகளுக்காக ஒரு சுவையான தால் ரெசிபியைக் கொடுத்துள்ளது. இந்த ரெசிபிக்கு தால் கபிலா என்று பெயர்.

இது ஒரு மொகலாய ரெசிபி. இது மிகவும் ஆரோக்கியமான ரெசிபியும் கூட. குறிப்பாக இந்த ரெசிபியை நீரிழிவு நோய் உள்ளவர்கள் சாப்பிடுவதால் இருந்தால், சிறிது காரம் குறைவாக சேர்த்துக் கொள்ள வேண்டும். சரி, இப்போது அந்த தால் கபிலா ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Tasty Dal Kabila For Diabetics

தேவையான பொருட்கள்:

உளுத்தம் பருப்பு 1 கப்
பட்டை - 1 இன்ச்
கிராம்பு - 3
ஏலக்காய் - 2
வரமிளகாய் - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
தக்காளி - 2 (நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மல்லி தூள் - 2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 டீஸ்பூன்
தண்ணீர் - 2 கப்
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)

செய்முறை:

முதலில் உளுத்தம் பருப்பை நீரில் 4 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அதனை நன்கு கழுவி, குக்கரில் போட்டு, அடுப்பில் வைத்து, தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.

பின் விசிலானது போனதும், குக்கரை திறந்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, சீரகம், ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின் வரமிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.

அடுத்து நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து வதக்கி, மல்லி தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து 5 நிமிடம் வதக்க வேண்டும்.

இறுதியில் குக்கரில் வேக வைத்துள்ள உளுத்தம் பருப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து, 5 நிமிடம் தீயை குறைவில் வைத்து வேக வைத்து இறக்க வேண்டும்.

இறுதியில் கொத்தமல்லியை மேலே தூவினால், சுவையான தால் கபிலா ரெடி!!!

English summary

Tasty Dal Kabila For Diabetics

Today we have a diabetic special recipe for you which is known as dal kabila. It is basically a part of the Mughlai cuisine but prepared in a way to suit the needs of the diabetic patients. So, try out dal kabila and rejuvenate your taste-buds.
Desktop Bottom Promotion