For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஸ்வீட் கார்ன் சுண்டல்

By Maha
|

சுண்டல் ரெசிபியில் பல்வேறு வகைகள் உள்ளன. அதில் ஒன்று தான் ஸ்வீட் கார்ன் என்னும் சோளத்தைக் கொண்டு செய்யப்படும் சுண்டல். இந்த சுண்டல் ரெசிபி மிகவும் ஆரோக்கியமானது. ஏனெனில் சோளத்தில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. எனவே இன்றைய நவராத்திரி பூஜைக்கு ஸ்வீட் கார்ன் கொண்டு சுண்டல் செய்து அம்மனுக்கு படைக்கலாம்.

சரி, இப்போது அந்த ஸ்வீட் கார்ன் சுண்டல் ரெசிபியின் செய்முறையைப் பார்ப்போம்.

Sweet Corn Sundal For Navratri

தேவையான பொருட்கள்:

ஸ்வீட் கார்ன் - 1 கப்
துருவிய தேங்காய் - 2-3 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 4-5 (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி - 1 டீஸ்பூன் (அலங்கரிக்க)
எலுமிச்சை - 1/2
உப்பு - தேவையான அளவு

தாளிப்பதற்கு...

கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
வரமிளகாய் - 2-3
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் சோளத்தைப் போட்டு, தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.

விசிலானது போனதும், அதிகப்படியான தண்ணீரை வடித்து விட்டு, சோளமணிகளை தனியாக ஒரு பௌலில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் மிக்ஸியில் தேங்காய் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, ஓரளவு அடித்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கடலைப் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து, வரமிளகாய், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை மற்றும் அரைத்த தேங்காய் கலவையை சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.

பிறகு வேக வைத்த சோளத்தை சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து 2 நிமிடம் கிளறி இறக்கினால், சூப்பரான ஸ்வீட் கார்ன் சுண்டல் ரெடி!!! இதன் மேல் கொத்தமல்லி மற்றும் எலுமிச்சை சாற்றினை ஊற்றி கிளறி, சூடாக பரிமாற வேண்டும்.

குறிப்பு:

இதனை உடனே சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால் தண்ணீர் விட ஆரம்பிக்கும்.

Image Courtesy: chefandherkitchen

English summary

Sweet Corn Sundal For Navratri

Navratri is going to start in few days and I am sure many of you would be busy with the arrangements for the festival. Various varieties of sundal and kheer varieties are prepared as prashad everyday for those nine days. So Here we gave sweet corn sundal recipe. Check out the recipe and try it.
Story first published: Tuesday, October 8, 2013, 17:44 [IST]
Desktop Bottom Promotion