For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பட்டாணி உருளைக்கிழங்கு இட்லி

By Maha
|

காலை வேளையில் இட்லி செய்ய போறீங்களா? முதலில் இதைப் படித்து பாருங்கள். ஏனெனில் இங்கு ஒரு அருமையான இட்லி ரெசிபியைக் கொடுத்துள்ளோம். இந்த இட்லி ரெசிபியானது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். மேலும் காலையில் செய்து கொடுக்க ஏற்றதும் கூட.

அது என்ன இட்லி என்று கேட்கிறீர்களா? அது வேறோன்றும் இல்லை, இந்த இட்லியில் உருளைக்கிழங்கு மற்றும் பட்டாணி மசாலாவை இட்லியின் உள்ளே வைத்து செய்வது தான். சரி, இப்போது அந்த பட்டாணி உருளைக்கிழங்கு இட்லியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

இதுப்போன்று வேறு: ஈஸியாக செய்யக்கூடிய 7 விதமான இட்லிகள்!!!

Stuffed Idly Recipe For Breakfast

தேவையான பொருட்கள்:

ரவை - 2 கப்
தயிர் - 1 கப்
உப்பு - தேவையான அளவு

உள்ளே வைப்பதற்கு...

வேக வைத்த பட்டாணி - 1 கப்
உருளைக்கிழங்கு - 1 கப் (வேக வைத்தது)
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1/2 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
ஆப்பசோடா - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் தயிரில் ரவை, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கலந்து, 1 மணிநேரம் மூடி வைத்து ஊற வைக்க வேண்டும்.

பின்னர் ஒரு பௌலில் வேக வைத்துள்ள பட்டாணி மற்றும் உருளைக்கிழங்கை மசித்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் அதில் மசித்து வைத்துள்ளதை சேர்த்து கிளறி, அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

பிறகு அதில் ஆப்பசோடா சேர்த்து கிளறி இறக்கி விட வேண்டும்.

இறுதியில் கலந்து வைத்துள்ள மாவை எடுத்து, இட்லி தட்டின் ஒரு குழியில் சிறிது விட்டு, பின் அதன் மேல் உருளைக்கிழங்கு கலவையை ஒரு ஸ்பூன் வைத்து, மீண்டும் அதன் மேல் இட்லி மாவை ஊற்ற வேண்டும். இதேப் போல் அனைத்து இட்லி குழியிலும் இட்லி மாவை ஊற்றி, இட்லி பாத்திரத்தில் வைத்து, வேக வைத்து இறக்கினால், சுவையான பட்டாணி உருளைக்கிழங்கு இட்லி ரெடி!!!

English summary

Stuffed Idly Recipe For Breakfast

Stuffed idly is a favourite among kids. It has a lot of healthy veggies to start your day with energy. Try the stuffed idly recipe for breakfast.
Desktop Bottom Promotion