For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முளைக்கட்டிய பயறு புலாவ்

By Maha
|

இன்றைய அவசர உலகில் தினமும் காலையில் நாம் என்ன சாப்பிடுகிறோம் என்று கவனிப்பதில்லை. இதனால் இதயம் எளிதில் பலவீனமடைந்து, பல இதய நோய்களுக்கு வழிவகுக்கிறது. எனவே இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு ஒரு சூப்பரான ரெசிபியைக் கொடுத்துள்ளோம். அது தான் முளைக்கட்டிய பயறு புலாவ். இந்த புலாவ் ரெசிபியில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்திருப்பதால், இதனை அடிக்கடி சமைத்து சாப்பிட்டால் நிச்சயம் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

இப்போது அந்த முளைக்கட்டிய பயறு புலாவ் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Sprouts Pulao: Heart Healthy Recipe

தேவையான பொருட்கள்:

முளைக்கட்டிய பச்சை பயறு - 1/2 கப் (வேக வைத்தது)
முளைக்கட்டிய தட்டைப் பயறு - 1/2 கப் (வேக வைத்தது)
கைக்குத்தல் அரிசி - 2 கப் (வேக வைத்தது)
குடைமிளகாய் - 1 (பெரியது, நறுக்கியது)
பீன்ஸ் - 4 (நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
வெங்காயம் - 1 (பெரியது, நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மல்லி தூள் - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
எண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் சேர்த்து தாளித்து, தீயை குறைவில் வைத்து நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு, பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, பீன்ஸ், குடைமிளகாய் மற்றும் உப்பு சேர்த்து, 5 நிமிடம் தொடர்ந்து கிளறி விட வேண்டும்.

பின்பு தக்காளி, மஞ்சள் தூள், சீரகப் பொடி, மல்லி தூள், மிளகாய் தூள் சேர்த்து, தீயை குறைவில் வைத்து 3-4 நிமிடம் வதக்கி விட வேண்டும்.

அடுத்து முளைக்கட்டிய பச்சை பயறு மற்றும் தட்டைப் பயறை சேர்த்து 5 நிமிடம் கிளறி, வேக வைத்துள்ள கைக்குத்தல் அரிசியை சேர்த்து, உப்பு மற்றும் கொத்தமல்லியைத் தூவி, 2-3 நிமிடம் பிரட்டி இறக்கினால், ஆரோக்கியமான முளைக்கட்டிய பயறு புலாவ் ரெடி!!!

English summary

Sprouts Pulao: Heart Healthy Recipe

Healthy eating habits can keep heart diseases at bay. So, here is a healthy sprouts pulao recipe which is a great option for the heart patients and all others who want to avoid heart diseases. Check out this heart healthy recipe of sprouts pulao and do give it a try.
Story first published: Wednesday, September 25, 2013, 18:58 [IST]
Desktop Bottom Promotion