Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English हिन्दी ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

காரமான காளான் மஞ்சூரியன்

Posted by:
Published: Tuesday, February 12, 2013, 17:56 [IST]

சைனீஸ் உணவுகளிலேயே மஞ்சூரியன் மிகவும் சுவையாக இருக்கும். மேலும் அது பலருக்கும் பிடித்த ஒரு உணவுகளுள் ஒன்று. ஏனெனில் இதன் சுவையும், மணமும் சைனீஸ் உணவுகளை சாப்பிடாதவர்களையும் சாப்பிட வைக்கும். அதிலும் மஞ்சூரியனில் பல வகைகள் உள்ளன.

இப்போது அவற்றில் காளான் மஞ்சூரியனை எப்படி எளிதில் சுவையான ருசியில் செய்வதென்று பார்ப்போமா!!!

spicy mushroom manchurian
தேவையான பொருட்கள்:

பட்டன் காளான் - 250 கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
சோள மாவு - 4-5 டேபிள் ஸ்பூன்
மைதா - 2 டேபிள் ஸ்பூன்
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 2 கப்
எண்ணெய் - தேவையான அளவு

தாளிப்பதற்கு...

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
சில்லி சாஸ் - 1 டீஸ்பூன்
தக்காளி கெட்சப் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் காளானை நன்கு கழுவி, சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின் அதனை ஒரு துணியில் மேல் நீர் உறிஞ்சுமாறு வைக்க வேண்டும்.

பின்னர் ஒரு பௌலில் சோள மாவு, மைதா, இஞ்சி பூண்டு பேஸ்ட், சோயா சாஸ், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து ஓரளவு கெட்டியான பதத்தில் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு கழுவி தனியாக வைத்துள்ள காளானை, அந்த கலவையில் போட்டு பிரட்டிக் கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அந்த காளானைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு மற்றொரு அடுப்பில் வேறு வாணலியை வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, இஞ்சி பூண்டு பேஸ்ட், வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு 2 நிமிடம் வதக்க வேண்டும்.

பின்னர் அதில் சோயா சாஸ், தக்காளி கெட்சப், சில்லி சாஸ், உப்பு மற்றும் பொரித்து வைத்துள்ள காளான் துண்டுகளை போட்டு நன்கு மற்றொரு 2 நிமிடம் கிளறி, இறக்கி விட வேண்டும்.

இப்போது சுவையான காளான மஞ்சூரியன் ரெடி!!!

English summary
There are many mushroom recipes that are easy to prepare and delicious too. Mushroom manchurian is also an easy to prepare starters (with gravy) that can also be served as an evening snack (dry). Check out the spicy recipe to prepare mushroom manchurian.
Subscribe Newsletter

Bold Talk