For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காரமான... டயமண்ட் பிஸ்கட்

By Maha
|

Spicy Diamond Biscuit
மாலை வேளையில் குழந்தைகளுக்கு எளிமையான முறையில் ஏதேனும் ஸ்நாக்ஸ் செய்ய வேண்டுமென்று ஆசைப்பட்டால், காரமான டயமண்ட் பிஸ்கட் சரியானதாக இருக்கும். இந்த பிஸ்கட் செய்வது மிகவும் ஈஸி. இதற்கு வீட்டில் உள்ள பொருட்களே போதுமானது. இப்போது அந்த காரமான டயமண்ட் பிஸ்கட் எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

மைதா - 1 கப்
உப்பு - 1 சிட்டிகை
ஓமம் - 1/2 டீஸ்பூன்
மிளகு தூள் - 1/4 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா, உப்பு, ஓமம், மிளகு தூள் மற்றும் சீரகம் போட்டு, தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

பின்னர் அதனை சப்பாத்தி போல் தேய்த்து, டயமண்ட் வடிவில் வெட்டி தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தட்டில் வைத்துள்ள டயமண்ட் துண்டுகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

இப்போது காரமான டயமண்ட் பிஸ்கட் ரெடி!!!

English summary

Spicy Diamond Biscuit

If you want to eat any crispy snacks in the evening, here we give the spicy diamond biscuit. Check out...
Story first published: Tuesday, June 4, 2013, 18:48 [IST]
Desktop Bottom Promotion