For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காரமான... சில்லி உருளைக்கிழங்கு ரெசிபி

By Maha
|

தினமும் ஒரே மாதிரியான சமையலை செய்து போர் அடித்துவிட்டதா? அப்படியானால், இங்கு கொடுக்கப்பட்டுள்ள சில்லி உருளைக்கிழங்கை ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள். இது செய்வதற்கு மிகவும் எளிமையானதாக இருப்பதோடு, சைனீஸ் ரெசிபியின் சுவைக்கு ஈடாக இருக்கும். மேலும் இந்த ரெசிபியானது வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

குறிப்பாக இந்த ரெசிபியை கர்ப்பிணிகள் சாப்பிடுவதாக இருந்தால், அஜினமோட்டோவை தவிர்த்துவிட வேண்டும். இப்போது அந்த சில்லி உருளைக்கிழங்கு ரெசிபியின் செய்முறையைப் பார்ப்போம்.

Spicy Chilli Potato Recipe

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 5
சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 2 (நறுக்கியது)
குடைமிளகாய் - 1 (நறுக்கியது)
பூண்டு - 6 பல் (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
அஜினமோட்டோ - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
சில்லி ப்ளேக்ஸ் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 4 (நறுக்கியது)
பச்சை மிளகாய் சாஸ் - 1 டீஸ்பூன்
சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி சாஸ் - 2 டேபிள் ஸ்பூன்
சில்லி வினிகர் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
தண்ணீர் - 1/4 கப்

செய்முறை:

முதலில் உருளைக்கிழங்கை தோலுரித்து, நீளமாக நறுக்கி, உப்பு கலந்த நீரில் 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

பின்னர் ஒரு பௌலில் சோள மாவு, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கெட்டியான பேஸ்ட் போல் கலந்து கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருளைக்கிழங்கை தண்ணீரில் இருந்து எடுத்து, ஒவ்வொன்றாக சோள மாவு பேஸ்ட்டில் பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு மற்றும் வெங்காயத்தை சேர்த்து 3-4 நிமிடம் வதக்க வேண்டும்.

பின் இஞ்சி பூண்டு பேஸ்ட், குடைமிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து 3 நிமிடம் வதக்க வேண்டும்.

பின்னர் அஜினமோட்டோ, சில்லி ப்ளேக்ஸ், உப்பு சேர்த்து 5 நிமிடம் கிளற வேண்டும்.

அடுத்து சோயா சாஸ், தக்காளி சாஸ், பச்சை மிளகாய் சாஸ், சில்லி வினிகர் சேர்த்து நன்கு கிளறி, பின் பொரித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து 5 நிமிடம் நன்கு பிரட்டி இறக்கினால், சுவையான சில்லி உருளைக்கிழங்கு ரெடி!!!

English summary

Spicy Chilli Potato Recipe

Spicy chilli potatoes is easy to prepare and the taste of this vegetarian recipe is simply irresistible. So, here is the recipe for spicy chilli potatoes. Try it out and have a lip-smacking meal.
Story first published: Tuesday, November 19, 2013, 12:31 [IST]
Desktop Bottom Promotion