For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காரமான... செட்டிநாடு பூண்டு குழம்பு

By Maha
|

செட்டிநாடு ஸ்டைல் ரெசிபிக்கள் நன்கு காரமாக இருப்பதுடன், நல்ல மணத்துடனும் இருக்கும். மேலும் பலருக்கும் செட்டிநாடு ஸ்டைல் ரெசிபிக்கள் தான் பிரியமான உணவுகளாக இருக்கும். ஆனால் பலர் செட்டிநாடு என்றால் அசைவ உணவுகள் மட்டும் தான் உள்ளது என்று நினைக்கின்றனர். அது தான் இல்லை. செட்டிநாடு ஸ்டைலில் சைவ உணவுகளும் உள்ளன. அதில் ஒன்றான செட்டிநாடு பூண்டு புளிக்குழம்பு பற்றி தான் இப்போது பார்க்கப் போகிறோம்.

மண மணக்கும் செட்டிநாடு ரெசிபிக்கள்!!!

இந்த செட்டிநாடு பூண்டு குழம்பானது ருசியாக இருப்பதுடன், செய்வதற்கு ஈஸியாகவும் இருக்கும். சரி, அந்த செட்டிநாடு பூண்டு குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Spicy Chettinad Poondu Kuzhambu

தேவையான பொருட்கள்:

பூண்டு - 10-12 பற்கள்
சின்ன வெங்காயம் - 5-6
தக்காளி - 1/2 பொடியாக நறுக்கியது
கடுகு - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
வரமிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிது
புளி - 1 எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
சாம்பார் பொடி - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
எண்ணெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
நாட்டுச்சர்க்கரை - 1/2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

வறுத்து அரைப்பதற்கு...

சீரகம் - 1/2 டீஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
மல்லி - 1/2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1/2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
சின்ன வெங்காயம் - 3
பூண்டு - 3-4 பற்கள்
வரமிளகாய் - 1
தக்காளி - 1/2

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கி இறக்கி, குளிர வைத்து மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து, பேஸ்ட் செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் புளியை வெதுவெதுப்பான நீரில் 10 நிமிடம் ஊற வைத்து, சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு மற்றெலாரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மீதமுள்ள எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை, வரமிளகாய், வெந்தயம், பெருங்காயத் தூள் சேர்த்து 2 நிமிடம் தாளிக்க வேண்டும்.

பின் அதில் பூண்டு மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வாக்கி, பின் நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்க வேண்டும்.

அடுத்து அதில் புளிச்சாற்றினை சேர்த்து கிளவு, அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விட வேண்டும்.

பின் அதில் 1/2 கப் தண்ணீர் ஊற்றி, 3 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

பின்பு அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சாம்பார் பொடி மற்றும் உப்பு சேர்த்து கிளறி, பின் நாட்டுச்சர்க்கரை சேர்த்து 10-15 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்கினால், செட்டிநாடு பூண்டு புளிக்குழம்பு ரெடி!!!

Image Courtesy: sharmispassions

English summary

Spicy Chettinad Poondu Kuzhambu

Do you know how to prepare chettinad poondu kuzhambu? Here is the simple way. Take a look...
Desktop Bottom Promotion