For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காரமான கத்திரிக்காய் வறுவல்

By Maha
|

உங்களுக்கு காரம் என்றால் மிகவும் பிடிக்குமா? அப்படியானால் விலை மலிவில் கிடைக்கும் கத்திரிக்காயைக் கொண்டு அருமையான சுவையில் ஒரு வறுவல் செய்து சாப்பிடுங்கள். அதிலும் வட இந்திய ஸ்டைலில் கத்திரிக்காயை வறுவல் செய்து சாப்பிட்டால், அதன் சுவையே தனி தான்.

இப்போது அந்த வட இந்திய ஸ்டைல் கத்திரிக்காய் வறுவலின் செய்முறையைப் பார்ப்போமா!!!

Spicy Brinjal Curry Recipe

தேவையான பொருட்கள்:

கத்திரிக்காய் - 4-5
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
தக்காளி - 2 (நறுக்கியது)
அரைத்த தக்காளி - 2 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சீரகம் - 1 டீஸ்பூன்
பிரஷ் க்ரீம் - 3 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் கத்திரிக்காயை நீரில் கழுவி, ஒவ்வொன்றையும் நான்காக கத்தியால் நறுக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கத்திரிக்காயைப் போட்டு மிதமான தீயில் பொன்னிறமாக பொரித்து, ஒரு தட்டில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள் சேர்த்து 2-3 நிமிடம் வதக்க வேண்டும்.

பிறகு அதில் நறுக்கி வைத்துள்ள தக்காளி மற்றும் அரைத்த தக்காளியைப் போட்டு கிளறி, உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து 4-5 நிமிடம் கிளறி விட வேண்டும்.

அடுத்து அதில் பொரித்து வைத்துள்ள கத்திரிக்காயைப் போட்டு பிரட்டி, அதில் எவ்வளவு கிரேவி வேண்டுமோ அவ்வளவு தண்ணீர் சிறிது சேர்த்து கிளறி, ஒரு கொதி விட்டு, பின் அதன் மேல் பிரஷ் க்ரீம் சேர்த்து பிரட்டி, கொத்தமல்லியைத் தூவி அலங்கரித்தால், காரமான கத்திரிக்காய் வறுவல் ரெடி!!!

English summary

Spicy Brinjal Curry Recipe

This delightful vegetarian recipe of brinjal has a rich and creamy texture and a lip-smacking taste which makes it simply irresistible.
Story first published: Tuesday, April 15, 2014, 12:28 [IST]
Desktop Bottom Promotion