For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உருளைக்கிழங்கு கோவைக்காய் சப்ஜி

By Maha
|

குளிர்காலத்தில் கோவைக்காய் அதிகம் கிடைப்பதால், இந்த காய்கறியைக் கொண்டு பலவாறு சமைத்து சாப்பிடுங்கள். ஏனெனில் இந்த காய்கறி மிகவும் சுவையாக இருப்பதுடன், ஆரோக்கியமானதும் கூட. அதிலும் இதனை உருளைக்கிழங்குடன் சேர்த்து சப்ஜி போன்று செய்து சாப்பிட்டால், இன்னும் அருமையாக இருக்கும்.

சரி, இப்போது உருளைக்கிழங்கு கோவைக்காய் சப்ஜியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Spicy Aloo Parval Ki Sabji Recipe

தேவையான பொருட்கள்:

கோவைக்காய் - 500 கிராம்
உருளைக்கிழங்கு - 4
வெங்காய பேஸ்ட் - 4 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
தயிர் - 1/2 கப்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
மல்லி தூள் - 1 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
சர்க்கரை - 1 சிட்டிகை
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
சீரகம் - 1 டீஸ்பூன்
பட்டை - 1
பச்சை ஏலக்காய் - 3
பிரியாணி இலை - 1
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்
தண்ணீர் - 1 கப்

செய்முறை:

முதலில் உருளைக்கிழங்கு மற்றும் கோவைக்காயை நீரில் நன்கு கழுவி, நறுக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருளைக்கிழங்கு மற்றும் கோவைக்காய் சேர்த்து, உப்பு தூவி மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்து எடுத்து, தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெயை சேர்த்து, சீரகம், பெருங்காயத் தூள், பட்டை, ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து 2-3 நிமிடம் தாளிக்க வேண்டும்.

அடுத்து வெங்காய பேஸ்ட் சேர்த்து தீயை குறைவில் வைத்து 5 நிமிடம் வதக்க வேண்டும்.

பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகப் பொடி, மல்லி தூள் சேர்த்து 3-4 நிமிடம் கிளறி விட வேண்டும்.

பிறகு சர்க்கரை மற்றும் தயிரை ஒன்றாக கலந்து, வாணலியில் சேர்த்து கிளறி விடவும்.

அடுத்து உருளைக்கிழங்கு மற்றும் கோவைக்காய் சேர்த்து கிளறி, உப்பு சேர்த்து 3-4 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

பின் தண்ணீர் சேர்த்து, மூடி வைத்து குறைவான தீயில் 10 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

காய்கறிகள் நன்கு வெந்துவிட்டால், அதில் கரம் மசாலா சேர்த்து கிளறி, மேலே நெய் ஊற்றி இறக்கினால், சுவையான உருளைக்கிழங்கு கோவைக்காய் சப்ஜி ரெடி!!!

English summary

Spicy Aloo Parval Ki Sabji Recipe

Today, we have a simple yet mouthwatering recipe of spicy aloo parval ki sabji for you to try.
Story first published: Tuesday, December 3, 2013, 12:23 [IST]
Desktop Bottom Promotion