For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கேரளா ஸ்டைல் பரோட்டா ரெசிபி

By Maha
|

இந்தியாவில் கேளரா ஸ்டைல் பரோட்டா மிகவும் பிரபலமானது. இந்த பரோட்டாவின் ஸ்பெஷல் என்னவென்றால், இதன் மென்மைத்தன்மை தான். அதுமட்டுமல்லாமல், இதில் நெய் சேர்த்து அருமையான முறையில் ஊற வைத்து பரோட்டாக்களாக செய்வதும் தான்.

இத்தகைய மென்மையான பரோட்டாவை சாப்பிட வேண்டுமெனில் கேரளாவிற்கு சென்றால், அதிகம் சாப்பிடலாம். ஆனால் இந்த பரோட்டாவிற்காக கேளரா செல்வதற்கு பதிலாக, இந்த பரோட்டாவை வீட்டிலேயே செய்து பார்க்கலாமே! இந்த பரோட்டா செய்ய வேண்டுமெனில் சற்று பொறுமை வேண்டும். ஏனெனில் நன்கு ஊற வைத்து செய்தால் தான், பரோட்டா மென்மையாக இருக்கும். சரி, இப்போது அந்த கேரளா ஸ்டைல் பரோட்டாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

மைதா - 1 கப்
உப்பு - 1/2 டீஸ்பூன்
ஓமம் - 1/2 டீஸ்பூன்
நெய் - 3 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 2 கப்
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் மைதா மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு, உப்பு, ஓமம் மற்றும் 3 டீஸ்பூன் நெய் சேர்த்து, வெதுவெதுப்பான நீர் சேர்த்து, 20-25 நிமிடம் நன்கு பிசைய வேண்டும்.

மாவானது நன்கு மென்மையானதும், அதனை ஒரு ஈரமான துணியால் மூடி, 30-45 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

பின்னர் கைகளில் எண்ணெயை தடவிக் கொண்டு, மாவை சிறு உருண்டைகளாக பிரித்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு தவாவை அடுப்பில் வைத்து, சூடேற்ற வேண்டும்.

அடுத்து உருண்டைகளை பரோட்டா போன்று தேய்த்துக் கொண்டு, தவாவில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி, தேய்த்து வைத்துள்ள பரோட்டாக்களைப் போட்டு, முன்னும் பின்னும் பொன்னிறமாகும் வரை வேக வைத்து எடுக்க வேண்டும். இதேப் போன்று அனைத்து உருண்டைகளையும் செய்ய வேண்டும்.

இப்போது சூப்பரான கேளரா ஸ்டைல் பரோட்டா ரெடி!!! இதனை சிக்கன் குருமாவுடன் சேர்த்து சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.

English summary

Soft Kerala Paratha Recipe

Kerala paratha is a popular Indian bread. The dough of Kerala paratha is really soft and must be kneaded properly. In Kerala, the paratha is traditionally kneaded for around an hour to make it soft and smooth. Check out the recipe.
Desktop Bottom Promotion