For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உருளைக்கிழங்கு கத்திரிக்காய் சப்ஜி

By Maha
|

குழந்தைகளை காய்கறிகள் சாப்பிட வைப்பது என்பது மிகவும் கடினம். ஆனால் அந்த காய்கறிகளை சரியான பக்குவத்தில் சமைத்துக் கொடுத்தால், நிச்சயம் அவர்கள் சாப்பிடுவார்கள். அப்படி குழந்தைகள் சாப்பிடாத காய்கறிகளில் ஒன்று தான் கத்திரிக்காய். அந்த கத்திரிக்காயை உருளைக்கிழங்குடன் சேர்த்து சப்ஜி போன்று செய்து கொடுத்தால், அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.

மேலும் இந்த ரெசிபியில் குறைவான அளவில் மசாலாப் பொருட்கள் சேர்த்திருப்பதால், அளவான காரத்துடன், மிகுந்த சுவையில் இருக்கும். சரி, இப்போது அந்த உருளைக்கிழங்கு கத்திரிக்காய் சப்ஜியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!

Simple Aloo Baingan Ki Sabzi Recipe

தேவையான பொருட்கள்:

பேபி உருளைக்கிழங்கு - 5 (வேக வைத்து தோலுரித்தது)
கத்திரிக்காய் - 1 (சிறியது, துண்டுகளாக்கப்பட்டது)
தக்காளி - 2 (நறுக்கியது)
பூண்டு - 5 பல் (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
வரமிளகாய் - 1
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, வெந்தயம், வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்னர் அதில் பூண்டு சேர்த்து சிறிது நேரம் வதக்கி, பின் கத்திரிக்காய் மற்றும் பேபி உருளைக்கிழங்கு சேர்த்து 3-4 நிமிடம் வதக்க வேண்டும்.

அடுத்து தக்காளி, உப்பு, சீரகப் பொடி, பச்சை மிளகாய் சேர்த்து கிளறி, தீயை குறைவில் வைத்து மூடி வைத்து 10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

காய்கறிகளானது நன்கு வெந்ததும், அதனை இறக்கி, அதன் மேல் கொத்தமல்லியைத் தூவினால், சுவையான உருளைக்கிழங்கு கத்திரிக்காய் சப்ஜி ரெடி!!!

English summary

Simple Aloo Baingan Ki Sabzi Recipe

Today, we have a simple aloo baingan ki sabzi recipe for you to try. This dish does not require much time and is prepared with minimal spices which makes it an excellent dish for kids as well as the grown-ups in the family to relish in.
Story first published: Monday, December 23, 2013, 12:17 [IST]
Desktop Bottom Promotion