For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்காலி ரெசிபி: சுக்டோ

By Maha
|

எப்போது பார்த்தாலும் சாம்பார், புளிக்குழம்பு, பொரியல் என்று செய்து அழுத்துப் போய்விட்டதா? சற்று வித்தியாசமான ரெசிபியை செய்ய ஆசைப்படுகிறீர்களா? அதிலும் பெங்காலி ரெசிபியை முயற்சிக்க ரெடியா? அப்படியெனில், பெங்காலி ரெசிபியில் ஒன்றான சுக்டோ என்னும் பல்வேறு காய்கறிகளைக் கொண்டு செய்யப்படும் ஒரு ரெசிபியை முயற்சித்துப் பாருங்கள். ஏன் பேச்சுலர்கள் கூட ட்ரை செய்யலாம்.

நிச்சயம் இந்த ரெசிபி வித்தியாசமான சுவையுடன் இருப்பதோடு, எளிதில் செய்யக்கூடியவாறும் இருக்கும். இப்போது அந்த பெங்காலி ரெசிபியான சுக்டோவின் செய்முறையைப் பார்ப்போமா!!!

Shukto: Bengali Vegetarian Recipe

தேவையான பொருட்கள்:

பாகற்காய் - 2 (துண்டுகளாக்கப்பட்டது)
உருளைக்கிழங்கு - 2 (துண்டுகளாக்கப்பட்டது)
கத்திரிக்காய் - 1 (துண்டுகளாக்கப்பட்டது)
வாழைக்காய் - 1 (தோலுரித்து, துண்டுகளாக்கப்பட்டது)
பச்சை பட்டாணி - 1/2 கப் (வேக வைத்தது)
தக்காளி - 1 (நறுக்கியது)
இஞ்சி - 1 இன்ச் (துருவியது)
பச்சை மிளகாய் - 2
பஞ்ச் போரான் - 1 டேபிள் ஸ்பூன்
கசகசா - 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 1 கப்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

பஞ்ச் போரானுக்கு...

கடுகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
வெங்காய விதை/வெங்காய விழுது - 1 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் மிக்ஸியில் கசகசா, பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் பஞ்ச் போரானுக்கு கொடுத்த அனைத்து பொருட்களையும் போட்டு, 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் ஊற்றி, கெட்டியான பேஸ்ட் போல் அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பாகற்காய், உருளைக்கிழங்கு மற்றும் கத்திரிக்காய் போன்றவற்றை ஒவ்வொன்றாக போட்டு வதக்க வேண்டும்.

பின்பு வாழைக்காய், பச்சை பட்டாணி சேர்த்து, தீயை குறைவில் வைத்து 5-6 நிமிடம் வதக்க வேண்டும்.

பிறகு அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து கிளறி, 3-4 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

பின் தக்காளி, மஞ்சள் தூள், உப்பு, சர்க்கரை ஆகியவற்றை போட்டு நன்கு கிளறி விட்டு, தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் குறைவான தீயிலேயே அனைத்து காய்களையும் வேக வைத்து இறக்க வேண்டும்.

இப்போது சூப்பரான பெங்காலி ரெசிபியான சுக்டோ ரெடி!!! இது சாதத்துடன் சாப்பிட ஏற்றதாக இருக்கும்.

English summary

Shukto: Bengali Vegetarian Recipe

Shukto requires a mix of vegetables like potatoes, bitter gourd, unripe banana etc. which makes this recipe a nutritious one too. The vegetables are tempered and cooked with a blend of some fragrant Indian spices. The best part of this Bengali recipe is that it is quick and easy to prepare. So, check out this unique vegetarian recipe of shukto and do give it a try.
Story first published: Friday, August 30, 2013, 12:58 [IST]
Desktop Bottom Promotion