For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஷாஹி காளான் பிரியாணி

By Neha Mathur
|

பெரும்பாலானோருக்கு பிரியாணி மிகவும் இஷ்டமான உணவாக இருக்கும். அதுவும் சிக்கன், மட்டன் போன்றவற்றால் செய்யப்படும் பிரியாணியைத் தான் விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் காளான் கொண்டு பிரியாணி செய்தால், அது அசைவ பிரியாணியின் சுவையைக் கொடுக்கும். இதனால் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

ஆகவே காளான் வீட்டில் இருந்தால், அப்போது அருமையான ஷாஹி காளான் பிரியாணியை செய்து, வீட்டில் உள்ளோரை அசத்துங்கள். சரி, அந்த ரெசிபியின் செய்முறையைப் பார்ப்போமா!!!

Shahi Mushroom Biryani Recipe

தேவையான பொருட்கள்:

சாதத்திற்கு...

பாசுமதி அரிசி - 2 கப்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
கிராம்பு - 3-4
கருப்பு ஏலக்காய் - 1
மிளகு - 3-4
உப்பு - தேவையான அளவு

காளான் மசாலாவிற்கு...

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கிராம்பு - 2
மிளகு - 3-4
கருப்பு ஏலக்காய் - 2
பட்டை - 1 இன்ச்
வெங்காயம் - 1 கப் (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
காளான் - 200 கிராம்
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)

அலங்கரிக்க...

வெங்காயம் - 1/2 கப்
முந்திரி - 5-6
குங்குமப்பூ - 1 சிட்டிகை (1 டேபிள் ஸ்பூன் பாலில் ஊற வைத்தது)
கொத்தமல்லி - 1 டீஸ்பூன் (நறுக்கியது)

செய்முறை:

சாதத்திற்கு...

முதலில் அரிசியை நன்கு கழுவி, நீரை வடித்து விட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், கிராம்பு, ஏலக்காய் மற்றும் மிளகு சேர்த்து 1 நிமிடம் வறுக்க வேண்டும்.

பின்பு அரிசியை அத்துடன் சேர்த்து, 4 கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, மூடி வைத்து, அரிசியானது முக்கால் பாகம் வெந்ததும், அதனை இறக்கி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

காளான் மசாலாவிற்கு...

காளானை நன்கு கழுவி, சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கிராம்பு, மிளகு, பட்டை சேர்த்து தாளித்து, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.

வெங்காயமானது பொன்னிறமானதும், அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

பின்பு மல்லி தூள், மிளகாய் தூள், உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 2-3 நிமிடம் வதக்க வேண்டும்.

வேண்டுமானால் 1 டேபிள் ஸ்பூன் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். பின் அதில் காளானை சேர்த்து, மூடி வைத்து, காளானை வேக வைக்க வேண்டும்.

காளானானது நன்கு வெந்து, தண்ணரானது வற்றியதும், அதில் கொத்தமல்லியை தூவி இறக்க வேண்டும்.

அலங்கரிக்க...

வெங்காயத்தை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வதக்கி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

முந்திரியையும் பொன்னிறமாக வறுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பிரியாணி...

ஒரு அகன்ற வாணலியில் மூன்றில் ஒரு பங்கு சாதத்தைப் போட்டு, அதன் மேல் காளான் மசாலா சிறிதை பரப்பி, மீண்டும் பாதி சாதத்தைப் போட்டு, மறுபடியும் மீதமுள்ள அனைத்து காளான் மசாலாவையும் பரப்பி, இறுதியில் மீதமிருக்கும் சாதத்தைப் பரப்பிக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதனை அடுப்பில் வைத்து, தீயை குறைவில் வைத்து, 8-10 நிமிடம் அனைத்து பொருட்களும் ஒன்று சேரும் வரை, மூடி வைத்து வேக வைத்து இறக்க வேண்டும்.

இறுதியில் மேலே வறுத்து வைத்துள்ள வெங்காயம் மற்றும் முந்திரியை தூவி, குங்குமப்பூ பாலை ஊற்றி, கொத்தமல்லியை தூவி அலங்கரித்தால், சுவையான ஷாஹி காளான் பிரியாணி ரெடி!!!

English summary

Shahi Mushroom Biryani Recipe

Biryani is one of the most favorite dish in our household. Although it's usually chicken or mutton biryani, this time I made a vegetarian version. Mushroom are known for the texture that is very meaty. This mushroom biryani is sure to delight everyone in your family including your kids. So here is the recipe.
Story first published: Monday, December 2, 2013, 11:53 [IST]
Desktop Bottom Promotion