For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஷாஹி முந்திரி சப்ஜி

By Maha
|

தினமும் காய்கறிகளைக் கொண்டு சமைத்து சாப்பிட்டு போர் அடித்திருந்தால், சற்று வித்தியாசமாக முந்திரியைக் கொண்டு ஒரு சப்ஜி செய்து சாப்பிடுங்கள். அதிலும் முகலாய ரெசிபியான ஷாஹி முந்திரி சப்ஜியை செய்து சாப்பிடுங்கள். இந்த சப்ஜி வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு செய்து கொடுக்க ஏதுவான ஒரு ஸ்பெஷல் ரெசிபியாக இருக்கும். குறிப்பாக சப்பாத்தி, நாண் போன்றவற்றிற்கு சூப்பராக இருக்கும்.

சரி, இப்போது அந்த ஷாஹி முந்திரி சப்ஜியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Shahi Kaju Sabji

தேவையான பொருட்கள்:

முந்திரி - 1 கப்
தக்காளி - 3 (அரைத்தது)
வெங்காயம் - 2 (தோலுரித்தது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
பட்டை - 1 இன்ச்
கிராம்பு - 3
பச்சை ஏலக்காய் - 3
மல்லி - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 4-5
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
மாங்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
உலர்ந்த வெந்தய இலை - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 1 1/2 கப்

செய்முறை:

முதலில் 5-6 முந்திரியை எடுத்து, அதனை மிக்ஸியில் போட்டு, அத்துடன் வெங்காயம், பட்டை, ஏலக்காய், கிராம்பு, மல்லி, சீரகம், வரமிளகாய் மற்றும் 1/2 கப் தண்ணீர் ஊற்றி, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மீதமுள்ள முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, அதனை தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் அதே எண்ணெயில் அரைத்து வைத்துள்ள வெங்காய பேஸ்ட் சேர்த்து, தீயை குறைவில் வைத்து 5 நிமிடம் கிளறி விட வேண்டும்.

அடுத்து இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, அதில் அரைத்த தக்காளி, கரம் மசாலா, மஞ்சள் தூள், மாங்காய் தூள் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

பிறகு அதில் வெந்த இலையை கையால் நசுக்கி சேர்த்து, உப்பு, சர்க்கரை மற்றும் 1 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும்.

இறுதியில் அதில் வறுத்து வைத்துள்ள முந்திரியை சேர்த்து, தீயை குறைவில் வைத்து 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி, அதன் மேல் கொத்தமல்லியை தூவி பரிமாறினால், சுவையான ஷாஹி முந்திரி சப்ஜி ரெடி!!!

English summary

Shahi Kaju Sabji

The recipe for shahi kaju sabji is quite straightforward and simple. It is an ideal recipe if you have some very special friends or family coming over for lunch/dinner. They will definitely enjoy it. So, try out this new and extremely delicious Indian recipe for making shahi kaju sabji
Story first published: Tuesday, October 1, 2013, 17:40 [IST]
Desktop Bottom Promotion