For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரவை பொங்கல்

By Maha
|

Rava Pongal: A Healthy Alternative
பொங்கல் என்றால் அனைவருக்குமே புத்தரிசியால் செய்யப்படும் சர்க்கரைப் பொங்கல் தான் ஞாபகத்திற்கு வரும். ஆனால் இப்போது சற்று வித்தியாசமாக ரவையை வைத்து பொங்கல் செய்யப் போகிறோம். அந்த ரவை பொங்கலை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

வெள்ளை/கோதுமை ரவை - 1 கப்
பாசி பருப்பு - 1/2 கப்
நெய் - 4 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
முந்திரி - 8
இஞ்சி - 1 இன்ச் (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் பாசிப் பருப்பை போட்டு, 1 கப் தண்ணீர் ஊற்றி, 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.

பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி, ரவையை போட்டு லேசாக வறுத்து, தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மீண்டும் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி, மிளகு, சீரகம் போட்டு, 2 நிமிடம் வறுத்து இறக்கி, குளிர வைக்க வேண்டும்.

பின்னர் வறுத்து வைத்துள்ள சீரகம் மற்றும் மிளகை மிக்ஸியில் போட்டு நன்கு நைஸாக பொடி செய்து கொள்ள வேண்டும்.

பின்பு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 கப் தண்ணீர் ஊற்றி, நன்கு கொதிக்கும் போது, வேக வைத்துள்ள பாசிப் பருப்பு மற்றும் வறுத்து வைத்துள்ள ரவை மற்றும் உப்பு போட்டு கிளறி, கொதிக்க விட வேண்டும்.

நீரானது ரவையிலிருந்து குறையும் போது, அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய்யை ஊற்றி கிளற வேண்டும்.

பிறகு அதில் அரைத்து வைத்துள்ள பொடியை போட்டு, தீயை குறைவில் வைத்து கிளறி, 7-8 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

அதற்குள் ஒரு சிறு வாணலியில் நெய் ஊற்றி, கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, முந்திரி மற்றும் பச்சை மிளகாய் போட்டு தாளித்து, மற்றொரு அடுப்பில் இருக்கும் ரவையில் ஊற்றி, கிளறி இறக்க வேண்டும்.

இப்போது சுவையான ரவை பொங்கல் ரெடி!!!

English summary

Rava Pongal: A Healthy Alternative | ரவை பொங்கல்

All pongal recipes are traditionally prepared with rice. However, rava pongal is a delicious and healthy alternative to rice. The rava used in the pongal is both filling and nutritious.
Story first published: Tuesday, January 8, 2013, 19:26 [IST]
Desktop Bottom Promotion