For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரவை தேங்காய் உப்புமா

By Maha
|

அலுவலகம் செல்லும் போது காலையில் மிகவும் ஈஸியாக செய்து முடிக்கக்கூடியவாறான ரெசிபியைத் தான் செய்ய விரும்புவோம். அப்படி காலை வேளையில் எளிதில் செய்து முடிக்கக்கூடிய ஒரு ரெசிபி தான் உப்புமா. பொதுவாக உப்புமா செய்ய அனைவருக்குமே தெரியும். ஆனால் இங்கு கொடுக்கப்பட்டுள்ள ரவை தேங்காய் உப்புமாவின் ஸ்பெஷல் என்னவென்றால், அது தேங்காய் பால் பயன்படுத்தி செய்வது தான்.

சரி, இப்போது அந்த ரவை தேங்காய் உப்புமாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Rava Coconut Upma Recipe

தேவையான பொருட்கள்:

ரவை - 1 கப்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
வெங்காயம் - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2
துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
நெய் - 2 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
தண்ணீர் - 1/2 கப்

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ரவையை போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.

பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து பொன்னிறமானதும், வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்பு அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.

பிறகு தேங்காயை மிக்ஸியில் போட்டு, அதில் தண்ணீர் ஊற்றி அரைத்து தேங்காய் பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து, அந்த தேங்காய் பாலை வாணலியில் ஊற்றி, உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

இறுதியில் வறுத்து வைத்துள்ள ரவையை வாணலியில் சேர்த்து, நெய் ஊற்றி ஒருமுறை கிளறி, மூடி வைத்து 5-6 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

எப்போது வாணலியில் உள்ள நீரானது முற்றிலும் வற்றுகிறதோ, அப்போது வாணலியை அடுப்பில் இருந்து இறக்கினால், ரவை தேங்காய் உப்புமா ரெடி!!!

English summary

Rava Coconut Upma Recipe

To try this yummy rava coconut upma recipe, you need to have the patience! This morning, indulge in this yummy breakfast recipe.
Story first published: Thursday, July 31, 2014, 19:42 [IST]
Desktop Bottom Promotion