For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காராமணி கடைசல்

By Maha
|

பருப்பு வகைகளில் உடலுக்கு வேண்டிய சத்துக்கள் நிறைய நிறைந்துள்ளன. எனவே அத்தகைய பருப்புக்களை வாரத்திற்கு 2-3 முறையாவது உணவில் சேர்க்க வேண்டும். அந்த வகையில் இன்று காராமணியை எப்படி எளிமையான முறையில் செய்வது என்று பார்க்கப் போகிறோம். இந்த ரெசிபியை பேச்சுலர்கள் கூட செய்து பார்க்கலாம். ஏனெனில் அந்த அளவில் இதன் செய்முறையானது மிகவும் எளிமையாக இருக்கும்.

சரி, இப்போது அந்த காராமணிக் கடைசலின் செய்முறையைப் பார்ப்போமா!!!

Rajma With Garam Masala Recipe

தேவையான பொருட்கள்:

காராமணி - 1 கப்
வெங்காயம் - 2 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி - 2 (நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 1 கப்

கரம் மசாலாவிற்கு...

பட்டை - 2
பச்சை ஏலக்காய் - 3
கருப்பு ஏலக்காய் - 2
கிராம்பு - 5
மிளகு - 15
ஜாதிக்காய் - 1

செய்முறை:

முதலில் காராமணியை 4-5 மணிநேரம் நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் காராமணியை கழுவிப் போட்டு, உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி, தீயை குறைவில் வைத்து, 2-3 விசில் விட்டு இறக்க வேண்டும்.

பின்பு விசில் போனதும் குக்கரைத் திறந்து, காராமணியைக் குளிர வைக்க வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கரம் மசாலாவிற்கு கொடுத்துள்ள அனைத்துப் பொருட்களையும் போட்டு, 2-3 நிமிடம் வறுத்து இறக்கி, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு நன்கு நைஸாக அரைக்க வேண்டும்.

அடுத்து மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம் சேர்த்து 4-5 நிமிடம் வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, 2 நிமிடம் வதக்க வேண்டும்.

பின் நறுக்கி வைத்திருக்கும் தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகப் பொடி, மல்லித் தூள் மற்றும் உப்பு சேர்த்து, தீயை குறைவில் வைத்து, 5 நிமிடம் கிளறி விட வேண்டும்.

இறுதியில் வேக வைத்துள்ள காராமணியை சேர்த்து கிளறி, 4-5 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு, அரைத்து வைத்துள்ள கரம் மசாலாவை தூவி கிளறி இறக்க வேண்டும்.

அடுத்து, அதனை பருப்பு மத்து கொண்டு கடைந்து பரிமாறினால், சூப்பரான காராமணி கடைசல் ரெடி!!!

English summary

Rajma With Garam Masala Recipe

Check out the simple curry of rajma with homemade garam masala recipe.
Story first published: Saturday, June 29, 2013, 13:43 [IST]
Desktop Bottom Promotion