For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காராமணி சாண்ட்விச்

By Maha
|

வட இந்தியாவில் மிகவும் பிரபலமான ஒரு பயறு தான் காராமணி. இந்த காராமணியை வைத்து மசாலா தான் செய்வார்கள். ஆனால் அந்த காராமணியை வைத்து சாண்ட்விச் கூட செய்யலாம் என்பது தெரியுமா?

இங்கு காலை வேளையில் விரைவில் செய்யக்கூடியவாறான காராமணி சாண்ட்விச்சின் எளிமையான செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து பாருங்கள்.

Rajma Sandwich Recipe For Breakfast

தேவையான பொருட்கள்:

காராமணி - 1/2 கப் (ஊற வைத்தது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
பன்னீர் - 2 டீஸ்பூன் (துருவியது)
வெள்ளரிக்காய் - 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)
சாட் மசாலா - 1 சிட்டிகை
மிளகாய் தூள் - 1 சிட்டிகை
கருப்பு உப்பு - 1 சிட்டிகை
சீஸ் - 1 டீஸ்பூன்
பிரட் துண்டுகள் - 8
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
வெண்ணெய்/நெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் ஊற வைத்துள்ள காராமணியை நன்கு கழுவி, குக்கரில் போட்டு, சிறிது உப்பு சேர்த்து, 3 விசில் விட்டு இறக்க வேண்டும்.

பின்னர் குக்கரை திறந்து, காராமணியை தனியாக ஒரு பௌலில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு சிறு பாத்திரத்தில் வெங்காயம், வெள்ளரிக்காய், பன்னீர் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, அத்துடன் சாட் மசாலா, மிளகாய் தூள், கருப்பு உப்பு, எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி, பின் அதில் காராமணியை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

பின் பிரட் துண்டுகளை எடுத்து, அதில் வெண்ணெயை தடவி, அதன் மேல் துருவிய பன்னீரை பரப்பி, அடுத்து காராமணி கலவையை வைத்து, மற்றொரு பிரட்டால் மூடி, டோஸ்டரில் போட்டு பொன்னிறமாக டோஸ்ட் செய்து எடுக்க வேண்டும். இதேப் போன்று அனைத்து பிரட் துண்டுகளையும் செய்தால், காராமணி சாண்ட்விச் ரெடி!!!

English summary

Rajma Sandwich Recipe For Breakfast

Rajma sandwich is a simple and delicious breakfast recipe that can be prepared quickly as well. Here is the recipe. Take a look.
Story first published: Friday, April 11, 2014, 18:30 [IST]
Desktop Bottom Promotion