For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அப்பள பொரியல்: வீடியோவுடன்...

By Maha
|

இதுவரை எத்தனையோ பொரியல்களை முயற்சி செய்திருப்போம். ஆனால் அப்பளத்தைக் கொண்டு செய்திருக்கமாட்டோம். என்ன ஆச்சரியமாக உள்ளதா? ஆம், அப்பளத்தைப் எண்ணெய் போட்டு பொரித்து சாப்பிடாமல், அதனை பொரியல் போன்று செய்து சாப்பிடலாம்.

இங்கு அந்த அப்பள பொரியலின் ரெசிபி, வீடியோவுடன் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து முயற்சித்து பார்த்து சுவைத்து மகிழுங்கள்.

Quick & Easy Papad Ki Sabzi Recipe (Watch Video)

தேவையான பொருட்கள்:

அப்பளம் - 2
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
வெங்காயத் தாள் - 2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
மாங்காய் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான பொருட்கள்
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் அப்பளத்தை உடைத்து போட்டு பொன்னிறமாக ரோஸ்ட் செய்து, தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பிறகு அதில் சீரகப் பொடி, மல்லி தூள், மாங்காய் தூள், உப்பு, வெங்காயத் தாள் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து 4-5 நிமிடம் வதக்கி விட வேண்டும்.

பின்பு அதில் அப்பளத்தை நொறுக்கிப் போட்டு, 1-2 நிமிடம் கிளறி, இறக்கி, கொத்தமல்லியை தூவினால் அப்பள பொரியல் ரெடி!!!

<center><iframe width="100%" height="417" src="//www.youtube.com/embed/BTzhsD2oVAg" frameborder="0" allowfullscreen></iframe></center>

English summary

Quick & Easy Papad Ki Sabzi Recipe (Watch Video)

Try out this quick and easy papad ki sabzi recipe. Watch the video at the end of the article for assistance.&#13;
Story first published: Saturday, April 26, 2014, 12:45 [IST]
Desktop Bottom Promotion