For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியன் ஸ்டைல்... குடைமிளகாய் சாண்ட்விச்

By Maha
|

வேலைக்கு செல்லும் பெரும்பாலானோர் காலையில் சாண்ட்விச்சைத் தான் காலை உணவாக எடுத்து வருகின்றனர். அப்படி நீங்களும் காலையில் சாண்ட்விச் சாப்பிடுபவராக இருந்தால், ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் நிறைந்த குடைமிளகாய் கொண்டு சாண்ட்விச் செய்து சாப்பிடுங்கள். அதிலும் இந்தியன் ஸ்டைலில் செய்து சாப்பிடுங்கள்.

இங்கு இந்தியன் ஸ்டைல் குடைமிளகாய் சாண்ட்விச்சின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!!

Quick Capsicum Sandwich For Breakfast

தேவையான பொருட்கள்:

பிரட் துண்டுகள் - 6
குடைமிளகாய் - 2 (நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2-3 நிமிடம் வதக்க வேண்டும்.

பின்னர் அதில் குடைமிளகாய் சேர்த்து 3-4 நிமிடம் வதக்கி, பின் தக்காளி, உப்பு, மிளகுத் தூள், சீரகப் பொடி சேர்த்து மீண்டும் 3-4 நிமிடம் வதக்க வேண்டும்.

பின்பு அதனை மூடி வைத்து 2 நிமிடம் குறைவான தீயில் வேக வைத்து இறக்கி விட வேண்டும்.

பிறகு ஒரு பிரட் துண்டை எடுத்து, அதில் சிறிது குடைமிளகாய் கலவையை வைத்து பரப்பி, அதன் மேல் மற்றொரு பிரட் துண்டை வைத்து, தோசைக்கல் அல்லது க்ரில் மிஷினில் வைத்து டோஸ் செய்து பரிமாறினால், குடைமிளகாய் சாண்ட்விச் ரெடி!!!

English summary

Quick Capsicum Sandwich For Breakfast

Take a look at this easy and quick Indian style capsicum sandwich recipe and try it out this morning.
Story first published: Tuesday, September 16, 2014, 17:43 [IST]
Desktop Bottom Promotion