For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பஞ்சாபி ஸ்டைல் காராமணி ரெசிபி

By Maha
|

காராமணியை வைத்து பலவாறு சமைக்கலாம். அதில் பஞ்சாபி ஸ்டைல் காராமணி ரெசிபி தான் மிகவும் பிரபலமானது. மேலும் இந்த ஸ்டைல் காராமணி ரெசிபியானது சாதம் மற்றும் சப்பாத்தி இரண்டிற்குமே மிகவும் சூப்பராக இருக்கும்.

அதுமட்டுமின்றி, இந்த ஸ்டைல் காராமணி மசாலா ரெசிபியானது செய்வது மிகவும் ஈஸி. சரி, இப்போது அந்த பஞ்சாபி ஸ்டைல் காராமணி ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!

Punjabi Style Rajma Recipe

தேவையான பொருட்கள்:

சிவப்பு காராமணி - 1 கப் (ஊற வைத்தது)
வெங்காயம் - 2 (அரைத்தது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
தக்காளி - 3 (அரைத்தது)
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
பிரியாணி இலை - 1
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் ஊற வைத்துள்ள காராமணியை கழுவி, குக்கரில் போட்டு அடுப்பில் வைத்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, 5-6 விசில் விட்டு இறக்க வேண்டும்.

பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்பு அரைத்த வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து தீயை குறைவில் வைத்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.

பிறகு மிளகாய் தூள், கரம் மசாலா, சீரகப் பொடி, மல்லி தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி, பின் அரைத்து வைத்துள்ள தக்காளியை ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, 2 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

பின்னர் வேக வைத்துள்ள காராமணியை லேசாக மசித்து, வாணலியில் ஊற்றி, சற்று கெட்டியான கிரேவி போன்று வரும் போது சுவை பார்த்து இறக்கினால் சுவையான பஞ்சாபி ஸ்டைல் காராமணி ரெசிபி ரெடி!

English summary

Punjabi Style Rajma Recipe

Prepare rajma masala recipe in the Punjabi style. It is simple, quick and tastes yummy.
Story first published: Thursday, January 23, 2014, 19:02 [IST]
Desktop Bottom Promotion