For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உருளைக்கிழங்கு தோசை

By Maha
|

வீட்டில் தோசை மாவு இல்லையா? ஆனால் காலையில் தோசை சாப்பிட ஆசை வந்துவிட்டதா? அப்படியானால் வீட்டில் மைதா மாவு மற்றும் உருளைக்கிழங்கு இருந்தால், சுவையான தோசையை செய்து சாப்பிடலாம். மேலும் இந்த தோசையானது குழந்தைகளால் விரும்பி சாப்பிடப்படும் தோசையாகவும் இருக்கும்.

குறிப்பாக பேச்சுலர்கள் இந்த தோசையை காலையில் செய்து சாப்பிடலாம். அந்த அளவில் மிகவும் எளிமையான செய்முறையைக் கொண்டது. சரி, இப்போது அந்த உருளைக்கிழங்கு தோசையை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

Potato Dosa Recipe For Breakfast

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்து தோலுரித்தது)
மைதா - 2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
கொத்தமல்லி - சிறிது
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் தோரித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை துருவிக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதனை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் மைதா மற்றும் உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி, இட்லி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.

பின்பு அதில் பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும், எண்ணெய் தடவி கலந்து வைத்துள்ள மாவை தோசைகளாக ஊற்றி முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், உருளைக்கிழங்கு தோசை ரெடி!!!

English summary

Potato Dosa Recipe For Breakfast

Try this potato dosa recipe for breakfast. It is a famous vegetarian breakfast recipe to try out this morning.
Story first published: Monday, June 9, 2014, 19:12 [IST]
Desktop Bottom Promotion