For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பச்சை பயறு தோசை: ஆந்திரா ஸ்டைல்

By Maha
|

எப்போதும் காலையில் அரிசி மாவைக் கொண்டு செய்யப்படும் தோசையை செய்து சாப்பிட்டு போர் அடித்துவிட்டதா? வித்தியாசமான சுவையில் உள்ள தோசையை செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? அப்படியானால் ஆந்திரா ஸ்டைல் ஸ்பெஷல் தோசையான பச்சை பயறு தோசையை செய்து சாப்பிடலாம்.

இது மிகவும் சுவையான தோசை. மேலும் ஈஸியான ரெசிபியும் கூட. சரி, இப்போது ஆந்திரை ஸ்டைல் பச்சை பயறு தோசையை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

Pesarattu Dosa Recipe: Andhra Style

தேவையான பொருட்கள்:

பச்சை பயறு/பாசி பயறு - 2 கப்
அரிசி - 3 டீஸ்பூன்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
இஞ்சி - 1 இன்ச் (பொடியாக நறுக்கியது)
சீரகம் - 1 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 5 (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு

மேலே தூவுவதற்கு...

வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

செய்முறை:

முதலில் பச்சை பயறு மற்றும் அரிசியை குறைந்தது 6 மணிநேரம் நீரில் ஊற வைக்க வேண்டும்.

பின்னர் அதனை நன்கு மென்மையாக கெட்டியான பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அதில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு, சீரகம் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பிறகு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், அதில் எண்ணெய் தடவி, பின் கலந்து வைத்துள்ள கெட்டியான மாவில் சிறிதை எடுத்து, கல்லில் போட்டு வட்டமாக கையால் பரப்பி விட்டு, அதன் மேல் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை தூவி, தோசை கரண்டியால் லேசாக தட்டி, பின் மேலே எண்ணெயை ஊற்றி, முன்னும் பின்னும் வேக வைத்து எடுக்க வேண்டும். இப்படி அனைத்து மாவையும் தோசைகளாக சுட்டுக் கொள்ள வேண்டும்.

இப்போது சுவையான ஆந்திரா ஸ்டைல் பச்சை பயறு தோசை ரெடி!!! இதனை தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

English summary

Pesarattu Dosa Recipe: Andhra Style

If you want to try out a traditional recipe this morning, we have something in store for you. Known as the Pesarattu dosa , it hails from the Andhra Pradesh and it is traditionally served alongside coconut chutney. Here is how you can make it. Take a look at the recipe we have shared with you.
Story first published: Tuesday, November 26, 2013, 19:44 [IST]
Desktop Bottom Promotion