For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வேர்க்கடலை சாதம்

By Maha
|

அனைவருக்குமே வித்தியாசமான வெரைட்டி ரைஸ் முயற்சி செய்து சாப்பிட விருப்பம் இருக்கும். அதிலும் காலையில் எழுந்ததும் சீக்கிரம் செய்யும் வகையில் உள்ள வெரைட்டி ரைஸை தான் பலர் விரும்புவார்கள். அப்படி காலையில் செய்வதற்கு ஏற்றவாறானது தான் வேர்க்கடலை சாதம்.

இந்த சாதம் மிகவும் ஈஸியானது, பேச்சுலர்கள் செய்வதற்கு ஏற்றதும் கூட. இங்கு அந்த வேர்க்கடலை சாதம் ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!

Peanut Rice Recipe

தேவையான பொருட்கள்:

சாதம் - 3/4 கப்
நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
வேர்க்கடலை - 1/4 கப்
எள் - 1 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் - 2
துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

தாளிப்பதற்கு...

எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
வேர்க்கடலை - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வேர்க்கடலை, எள், வரமிளகாய், துருவிய தேங்காய், உளுத்தம் பருப்ப மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதனை இறக்கி, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை மற்றும் வேர்க்கடலை சேர்த்து தாளித்து இறக்கிக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு பௌலில் சாதத்தை போட்டு, அதில் அரைத்த பொடி மற்றும் தாளித்ததை ஊற்றி, வேண்டுமானால் உப்பு சேர்த்து நன்கு கிளறினால், வேர்க்கடலை சாதம் ரெடி!!!

Image Courtesy: sharmispassions

English summary

Peanut Rice Recipe

A easy and quick to make variety rice perfect to pack for lunchbox.Trying out new variety rice has become a routine these days. Here is the peanut rice recipe. Check out and give it a try...
Story first published: Thursday, July 3, 2014, 20:11 [IST]
Desktop Bottom Promotion