For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஓணம் சத்ய ஸ்பெஷல்: பருப்பு குழம்பு

By Maha
|

ஓணம் சத்ய என்றால் என்னவென்று தெரியுமா? ஓணம் சத்ய என்றால், வாழை இலையில் கேரளாவில் மிகவும் பிரபலமான சில உணவுகளை சமைத்து விருந்து செய்வது தான். அந்த வகையில் கேரளாவில் பருப்பு குழம்பும் மிகவும் பிரபலமான ஒரு ரெசிபி. இந்த குழம்பை சாதத்துடன் சேர்த்து, நெய் ஊற்றி சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.

சரி, இப்போது அந்த கேரளா ஸ்டைல் பருப்பு குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Parippu Curry Recipe For Onam Sadya

தேவையான பொருட்கள்:

பாசிப்பருப்பு - 1/2 கப்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
தேங்காய் - 1/2 கப் (துருவியது)
சீரகம் - 1/2 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 3
தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்ழுன்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
வரமிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 3 கப்

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பாசிப்பருப்பைப் போட்டு பொன்னிறமாக வறுத்து, தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும்.

பின் மிக்ஸியில் தேங்காய், சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் சீரகம் போட்டு, 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் ஊற்றி, கெட்டியாக மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் பாசிப்பருப்பைப் போட்டுஇ தண்ணீர் ஊற்றி, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து, மூடி 3 விசில் விட்டு இறக்கி குளிர வைக்க வேண்டும்.

குக்கரானது குளிர்ந்ததும், அதனை திறந்து, பாசிப்பருப்பை மத்து கொண்டு நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அதனை வாணலியில் ஊற்றி 5 நிமிடம் கொதிக்க விட்டு, அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையைப் போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி, தீயை குறைவில் வைத்து, 5-6 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

மற்றொரு அடுப்பில் ஒரு சிறிய வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வரமிளகாய், கறிவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்த்து, 2-3 நிமிடம் நன்கு வதக்கி, பின் அதனைப் பருப்புக் கலவையில் ஊற்றி கிளறி, இறக்க வேண்டும்.

இப்போது அருமையான கேரளா ஸ்டைல் பருப்பு குழம்பு ரெடி!!!

English summary

Parippu Curry Recipe For Onam Sadya

The Kerala style parippu curry is also a part of the Onam Sadya. The specialty of this parippu curry is that the dal is cooked with a spiced coconut mixture, which lends a delectable flavour to this dish. Try out this Kerala style parippu curry at home and enjoy the taste of the Sadya.
Desktop Bottom Promotion