For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பன்னீர் தக்காளி கிரேவி

By Maha
|

பால் பொருட்களில் ஒன்றான பன்னீரில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் பெரும்பாலானோருக்கு பன்னீர் ரெசிபிக்கள் மிகவும் பிடிக்கும். அத்தகையவர்களுக்கு ஒரு அருமையான பன்னீர் ரெசிபி ஒன்று உள்ளது. அதனை மதிய வேளையில் செய்து, சாதத்துடன் சாப்பிட்டால், சூப்பராக இருக்கும். மேலும் இந்த ரெசிபியை பேச்சுலர்கள் கூட முயற்சி செய்து பார்க்கலாம். அந்த அளவில் மிகவும் எளிமையான செய்முறையைக் கொண்டது.

இந்த ரெசிபிக்கு பன்னீர் தக்காளி கிரேவி என்று பெயர். சரி, இப்போது அந்த ரெசிபியின் செய்முறையைப் பார்ப்போமா!!!

Paneer Tomato Gravy Recipe

தேவையான பொருட்கள்:

பன்னீர் - 250 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
தக்காளி சாஸ் - 1 டீஸ்பூனி
பிரியாணி இலை - 1
சீரகம் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பன்னீர் துண்டுகளைப் போட்டு 5-10 நிமிடம் பொன்னிறமாக பொரித்து தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்து, அடுப்பை அணைத்து விட வேண்டும்.

பின்னர் மிக்ஸியில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் போட்டு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, பிரியாணி இலை, சீரகம் போட்டு தாளித்து, அரைத்து வைத்துள்ள வெங்காய பேஸ்ட் சேர்த்து தீயை குறைவில் வைத்து, 2 நிமிடம் வதக்க வேண்டும். அதே சமயத்தில் தக்காளியை அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி, வெங்காய பேஸ்ட் பொன்னிறமாகும் வரை வதக்கி, அரைத்து வைத்திருக்கும் தக்காளியை ஊற்றி, மிளகாய் தூள், தக்காளி சாஸ் மற்றும் கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து தீயை அதிகரித்து, 2-3 நிமிடம் கிளறி, வறுத்து வைத்துள்ள பன்னீர் துண்டுகளைப் போட்டு, மீண்டும் 2 நிமிடம் வதக்கி விட்டு இறக்கினால், சுவையான பன்னீர் தக்காளி கிரேவி ரெடி!!!

English summary

Paneer Tomato Gravy Recipe

We often think that paneer recipes require time as they need to be rich and spicy. However, this paneer in tomato gravy recipe can be prepared in just 30 minutes! Also the ingredients used in the preparation of this main course side dish recipe is easily available in your kitchen. Check out the recipe.
Story first published: Monday, August 5, 2013, 11:27 [IST]
Desktop Bottom Promotion