For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பன்னீர் தோசைக்கான பன்னீர் மசாலா

By Maha
|

தோசைகளில் உருளைக்கிழங்கு மசாலா தோசை தான் மிகவும் பிரபலமானது. ஆனால் அந்த உருளைக்கிழங்கு மசாலா தோசை செய்து அலுத்துப் போனவர்கள், உருளைக்கிழக்கிற்கு பதிலாக பன்னீரை சேர்த்து செய்தால் சுவையாக இருப்பதோடு, ஆரோக்கியமானதாகவும் இருக்கும். மேலும் காலையில் இந்த தோசையை செய்து சாப்பிட்டால், ஒரு நாளைக்கு வேண்டிய அனைத்து ஆற்றலும், உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

சரி, இப்போது அந்த பன்னீர் தோசைக்கு தேவையான பன்னீர் மசாலாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Paneer Dosa Filling Recipe

தேவையான பொருட்கள்:

பன்னீர் - 1 கப் (துருவியது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
தக்காளி - 1 (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
சீரகம் - 1 சிட்டிகை
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் சேர்த்து தாளித்து, வெங்காயம் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பின்பு மஞ்சள் தூள், உப்பு மற்றும் தக்காளி சேர்த்து, தீயை குறைவில் வைத்து, தக்காளி நன்கு மசியுமாறு வதக்கிக் கொள்ள வேண்டும்.

தக்காளி நன்கு மசிந்ததும், பன்னீரைப் போட்டு நன்கு கிளறி, 4-5 நிமிடம் வேக வைத்து, இறக்கினால், பன்னீர் தோசைக்கான பன்னீர் மசாலா ரெடி!!! இதனை தோசை சுடும் போது, தோசையின் மேல் பன்னீர் கலவையை பரப்பி, எண்ணெய் ஊற்றி வேக வைத்து, பின் மடித்து, அதனை தேங்காய் சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

English summary

Paneer Dosa Filling Recipe

Paneer dosa is filling and easy to prepare recipe. If you are planning to try some different stuffed dosas for breakfast, then here is the paneer dosa recipe.
Story first published: Wednesday, September 11, 2013, 19:34 [IST]
Desktop Bottom Promotion