For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பன்னீர் சன்னா மசாலா

By Maha
|

பன்னீர் சன்னா மசாலாவானது வட இந்திய உணவுகளில் மிகவும் பிரபலமானது. இந்த ரெசிபியானது மிகவும் எளிமையானது. எந்த ஒரு கஷ்டமுமின்றி, வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே செய்யக்கூடியது. மேலும் இது சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட ஏற்றது.

அந்த பன்னீர் சன்னா மசாலாவின் செய்முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை முயற்சித்துப் பார்த்து எப்படி இருந்தது என்று சொல்லுங்கள்.

Paneer Chana Masala Recipe

தேவையான பொருட்கள்:

கொண்டைக்கடலை - 1 கப்
பன்னீர் - 250 கிராம் (துருவியது அல்லது நறுக்கியது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி - 2 (நறுக்கியது)
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மாங்காய் தூள் - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 1 கப்
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)

செய்முறை:

கொண்டைக்கடலையை நீரில் போட்டு 5 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

5 மணிநேரம் ஆனப் பின்பு, அதனை கழுவி குக்கரில் போட்டு 1 கப் தண்ணீர் மற்றும் சிறிது உப்பு சேர்த்து தீயை குறைவில் வைத்து, 3-4 விசில் விட்டு இறக்கி, அதனை குளிர வைக்க வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் போட்டு தாளித்து, வெங்காயம் சேர்த்து 5-6 நிமிடம் தீயை குறைவில் வைத்து வதக்க வேண்டும்.

பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2-3 நிமிடம் வதக்கி, தக்காளி, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகப் பொடி, மல்லி தூள், மாங்காய் தூள், மிளகு தூள் சேர்த்து 5-6 நிமிடம் கிளறி, பன்னீரைப் போட்டு, கரம் மசாலா சேர்த்து, தீயை குறைவில் வைத்து, 5 நிமிடம் வதக்கி இறக்க வேண்டும்.

இப்போது சுவையான பன்னீர் சன்னா மசாலா ரெடி!!! இதன் மேல் சிறிது கொத்தமல்லியை தூவி சப்பாத்தியுடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.

English summary

Paneer Chana Masala Recipe

Paneer chana masala is a spicy and delicious vegetarian delight from North India. It is a simple recipe which you can try out without going through much hassle. Here goes the recipe for paneer chana masala.
Story first published: Monday, August 12, 2013, 18:14 [IST]
Desktop Bottom Promotion