For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பன்னீர் பட்டர் மசாலா: தீபாவளி ஸ்பெஷல் ரெசிபி

By Maha
|

வட இந்தியாவில் மிகவும் பிரபலமான ஒரு ரெசிபி தான் பன்னீர் பட்டர் மசாலா. இந்த ரெசிபிக்கு நிறைய ஃபேன்கள் உள்ளனர். மேலும் இது சப்பாத்தி, நாண் போன்றவற்றிற்கு மிகவும் அருமையான சைடு டிஷ். வரும் தீபாவளிக்கு வீட்டில் சப்பாத்தி, நாண் போன்றவற்றை செய்தால், அதற்கு இந்த பன்னீர் பட்டர் மசாலாவை செய்யுங்கள்.

சரி, இப்போது அந்த பன்னீர் பட்டர் மசாலா ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Paneer Butter Masala: Diwali Special Recipe

தேவையான பொருட்கள்:

பன்னீர் - 500 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது)
வெண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
பிரியாணி இலை - 1
கிராம்பு - 2
பட்டை - 1
வரமிளகாய் - 2
வெங்காயம் - 1 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி - 3 (அரைத்தது)
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
உலர் வெந்தய இலை - 1 டீஸ்பூன் (நசுக்கியது)
பிரஷ் க்ரீம் - 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 1/2 கப்

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் வெண்ணெய் போட்டு, 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை, வரமிளகாய், பட்டை, கிராம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்னர் அதில் வெங்காயத்தை சேர்த்து, 4-5 நிமிடம் வதக்க வேண்டும்.

அடுத்து இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2-3 நிமிடம் வதக்கி விட வேண்டும்.

பின்பு மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் அரைத்த தக்காளியை ஊற்றி, 5-6 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

மசாலாவானது கொதிப்பதற்குள், மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து வெண்ணெய் சேர்த்து உருகியதும், பன்னீரைப் போட்டு, பொன்னிறமாக வதக்கி தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் அதனை மசாலாவில் சேர்த்து கிளறி, தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கிளறி, வெந்தய இலையை தூவி, தீயை குறைவில் வைத்து, 5-6 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி, அதன் மேல் பிரஷ் க்ரீமை பரப்பி இறக்கினால், சுவையான பன்னீர் பட்டர் மசாலா ரெடி!!!

குறிப்பு:

பிரஷ் க்ரீம் பிடிக்காதவர்கள், அதனை சேர்க்காமலும் இருக்கலாம்.

English summary

Paneer Butter Masala: Diwali Special Recipe

Today we have a creamy and delicious paneer recipe. Paneer butter masala is a popular recipe which hails from North India. Check out this awesome Diwali recipe of paneer butter masala and do give it a try.
Story first published: Tuesday, October 29, 2013, 13:13 [IST]
Desktop Bottom Promotion