For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பசலைக்கீரை கார்ன் குழம்பு

By Neha Mathur
|

பசலைக்கீரையைக் கொண்டு வெறும் கடைசல், பொரியல் மட்டும் தான் பலருக்கு செய்யத் தெரியும். இப்படி அடிக்கடி செய்து சாப்பிட்டு, பலருக்கு போர் அடித்திருக்கும். ஆனால் அந்த பசலைக்கீரையை பலவாறு சமைக்கலாம் என்பது தெரியுமா? அதிலும் பசலைக்கீரையை கார்ன் உடன் சேர்த்து கிரேவி போன்று செய்து சாப்பிட்டால், அதன் சுவை வித்தியாசமாக இருப்பதுடன், உடலுக்கு ஆரோக்கியமாகவும் இருக்கும்.

சரி, இப்போது பசலைக்கீரை கார்ன் உடன் சேர்த்து எப்படி குழம்பு செய்வதென்று பார்ப்போமா!!!

Palak Corn Curry Recipe

தேவையான பொருட்கள்:

பசலைக்கீரை - 250 கிராம்
எண்ணெய் - 5-6 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் - 3-4
சீரகம் - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1 கப் (நறுக்கியது)
பூண்டு - 5-6 பற்கள் (நறுக்கியது)
இஞ்சி - 1 இன்ச் (நறுக்கியது)
தக்காளி - 1/2 கப் (நறுக்கியது)
மல்லி தூள் - 3 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
கார்ன் - 3 கப் (மென்மையாக வேக வைத்தது)
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் பசலைக்கீரையை நன்கு கழுவி நறுக்கி கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி, தண்ணீரானது நன்கு கொதித்ததும், அதில் 2 டீஸ்பூன் உப்பு மற்றும் பசலைக்கீரையை சேர்த்து 2 நிமிடம் வேக வைத்து இறக்கி, நீரை வடித்துவிட்டு, பின் குளிர்ந்த நீரில் அலச வேண்டும்.

பின்பு அதனை மிக்ஸியில் போட்டு மென்மையாக அரைத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், வரமிளகாய், பூண்டு சேர்த்து தாளித்து, பின் வெங்காயம், இஞ்சி சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கி விட வேண்டும்.

பின் தக்காளி சேர்த்து வதக்கி, மல்லி தூள், மிளகாய் தூள், கரைம் மசாலா சேர்த்து கிளறி, 1/2 கப் தண்ணீர் ஊற்றி 3-4 நிமிடம் வேக விட வேண்டும்.

அடுத்து அதனை இறக்கி, 10 நிமிடம் குளிர வைத்து, பின்பு மிக்ஸியில் போட்டு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் அரைத்து வைத்துள்ள வெங்காய பேஸ்ட், பசலைக்கீரை மற்றும் 1 கப் தண்ணீர் ஊற்றி, 2-3 நிமிடம் கொதிக்க விட்டு, பின் வேக வைத்துள்ள கார்ன் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, மீண்டும் 3-4 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு, எலுமிச்சை சாற்றினை சேர்த்து கிளறி இறக்கி, அதன் மேல் சிறிது பிரஷ் க்ரீம் ஊற்றி அலங்கரித்தால், சுவையான பசலைக்கீரை கார்ன் குழம்பு ரெடி!!!

English summary

Palak Corn Curry Recipe

Palak and corn curry is a healthy and delicious curry. I make this quite often as it is liked by all in the family and goes well with roti, paratha, poori or even rice. Here is the recipe.
Story first published: Thursday, December 19, 2013, 11:43 [IST]
Desktop Bottom Promotion