For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பேச்சுலர்களுக்கான நூடுல்ஸ் ரெசிபி

By Maha
|

காலையில் நொடியில் சமைக்க வேண்டுமானால், நூடுல்ஸ் ரெசிபி தான் சரியானதாக இருக்கும். அதிலும் பேச்சுலர்கள் காலையில் தாமதமாக எழுவார்கள். அப்போது அவர்களுக்கு காலையில் சமைப்பதற்கு நூடுல்ஸ் சரியானதாக இருக்கும்.

இங்கு பேச்சுலர்களுக்கான மிகவும் எளிமையான மற்றும் வித்தியாசமான சுவைக் கொண்ட நூடுல்ஸ் ரெசிபியின் செய்முறையை கீழே கொடுத்துள்ளோம். அதைப் படித்து அவற்றை முயற்சி செய்து, காலையில் சமைத்து சாப்பிட்டு மகிழுங்கள்.

Noodle Recipe For Bachelors

தேவையான பொருட்கள்:

நூடுல்ஸ் - 500 கிராம்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
பட்டாணி - 2 டேபிள் ஸ்பூன்
கேரட் - 1 (நறுக்கியது)
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)
தண்ணீர் - 1 கப்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பின் அதில் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, தக்காளியைப் போட்டு நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

அடுத்து அதில் தண்ணீர் ஊற்றி, 5 நிமிடம் கொதிக்க விட்டு, பின்பு பச்சை பட்டாணி, கேரட் சேர்த்து, தீயை குறைவில் வைத்து 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

பிறகு அதில் நூடுல்ஸ் சேர்த்து, வேண்டுமானால் சிறிது தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, மூடி வைத்து தண்ணீர் வற்றும் வரை வேக வைக்க வேண்டும்.

தண்ணீரானது வற்றியதும், அதில் சோயா சாஸ் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான நூடுல்ஸ் ரெடி!!!

English summary

Noodle Recipe For Bachelors

If you are bachelor or spinster staying alone and if noodles is your staple food, this is a nice recipe for you to try out for breakfast, this morning. Here is how you make the sour noodles, take a look.
Story first published: Thursday, November 21, 2013, 18:52 [IST]
Desktop Bottom Promotion