For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சின்னம்மையைத் தடுக்கும் வேப்பிலை ரெசிபி

By Maha
|

கோடைகாலம் ஆரம்பமாகப் போகிறது. இக்காலத்தில் சின்னம்மை அதிகம் வரும் அபாயம் உள்ளதால், அதனை வராமல் தடுக்க முயற்சிக்க வேண்டும். அதிலும் சிலருக்கு சிறுவயதில் இருந்நே வரும். அப்படிப்பட்டவர்கள், அதனை வராமல் தடுக்க முயல வேண்டும்.

இங்கு அந்த சின்னம்மையைத் தடுக்கும் ஒரு வேப்பிலை ரெசிபியைக் கொடுத்துள்ளோம். அந்த ரெசிபியை படித்து, அதனை சாதம் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிடலாம். இதனால் உடலில் நோயெதிர்ப்பு சக்தியானது அதிகரித்து, சின்னம்மை வருவதைத் தடுக்கலாம்.

சரி, இப்போது சின்னம்மையைத் தடுக்கும் வேப்பிலை ரெசிபியைப் பார்ப்போமா!

Neem Chokha Recipe For Chicken Pox Prevention

தேவையான பொருட்கள்:

வேப்பங்கொழுந்து - 1 கட்டு
உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்து மசித்தது)
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
எண்ணெய - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் வேப்பங்கொழுந்தை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வேப்பங்கொழுந்தை போட்டு வதக்க வேண்டும்.

பின்பு அதில் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் வதக்க வேண்டும்.

பின் அதனை இறக்கி, அந்த கலவையை மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கில் சேர்த்து, கையால் பிசைந்தால், சின்னம்மையை தடுக்கும் வேப்பிலை ரெசிபி ரெடி!

English summary

Neem Chokha Recipe For Chicken Pox Prevention

Chicken pox prevention is extremely crucial in this season. Neem being an excellent antibiotic is effective in chicken pox prevention. So, check out this neem chokha recipe for chicken pox prevention.
Story first published: Saturday, February 22, 2014, 12:31 [IST]
Desktop Bottom Promotion