For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காளான் புலாவ்

By Maha
|

சைவ உணவாளர்களுக்கு காளான் ஒரு அருமையான உணவுப் பொருள். அத்தகைய காளானைக் கொண்டு காலை வேளையில் ஒரு காலை உணவு செய்ய நினைத்தால், காளான புலாவ் செய்யுங்கள். இது மிகவும் ஈஸியான காலை உணவாக இருக்கும். மேலும் மதியம் சாப்பிடுவதற்கு சூப்பராகவும் இருக்கும்.

சரி, இப்போது அந்த காளான் புலாவ் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Mushroom Pulao Recipe

தேவையான பொருட்கள்:

சாதம் - 2 கப்
வெங்காயம் - 2 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)
கடுகு - 1 டீஸ்பூன்
காளான் - 200 கிராம் (சுத்தமாக கழுவி நறுக்கியது)
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின் தீயை குறைவில் வைத்து, நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பின்பு தக்காளி மற்றும் உப்பு சேர்த்து வதக்கி, காளானை போட்டு கிளறி, சிறிது தண்ணீர் ஊற்றி, காளானை வேக வைக்க வேண்டும்.

காளான் நன்கு வெந்து, தண்ணீர் சுண்டியதும், அதில் சாதத்தைப் போட்டு கிளறி, அடுப்பில் இருந்து இறக்கி 5 நிமிடம் மூடி வைத்து, பின் பரிமாறினால், சுவையான காளான் புலாவ் ரெடி!!!

English summary

Mushroom Pulao Recipe

Vegetarian lovers who are fond of mushroom, then you must try this Mushroom Pulao Recipe. Here is the Mushroom Pulao Recipe, take a look:
Story first published: Monday, December 9, 2013, 19:06 [IST]
Desktop Bottom Promotion