For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காளான் மிளகு சாதம்

By Maha
|

தினமும் மதிய வேளையில் ஒரே மாதிரியான சமையல் செய்து போர் அடித்திருந்தால், சற்று கலவை சாதத்தை முயற்சி செய்யுங்கள். அதிலும் இங்கு கொடுக்கப்பட்டுள்ள காளான் மிளகு சாதத்தை முயற்சி செய்தால், இன்னும் சூப்பராக இருப்பதுடன், செய்வதற்கு மிகவும் ஈஸியாகவும் இருக்கும்.

இந்த சாதத்தை ஏதேனும் பச்சடியுடனோ அல்லது சாதாரணமாகவோ சாப்பிடலாம். சரி, இப்போது அந்த காளான் மிளகு சாதத்தை எப்படி செய்வதென்று பார்ப்போமா!

Mushroom Pepper Rice Recipe

தேவையான பொருட்கள்:

அரிசி - 1 1/2 கப்
காளான் - 500 கிராம் (நீரில் கழுவி நறுக்கியது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
மிளகு - 2 டேபிள் ஸ்பூன் (பொடி செய்து கொள்ளவும்)
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
கடுகு தூள் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் அரிசியை கழுவி, குக்கரில் போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, 2-3 விசில் விட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு பொன்றிமாக வதக்கி, பின் அதில் பச்சை மிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.

பின்பு அதில் மிளகாய் தூள், கடுகு தூள், மல்லி தூள் சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும்.

அடுத்து காளானை சேர்த்து வதக்கி, பின் பொடி செய்து வைத்துள்ள மிளகை சேர்த்து, தண்ணீர் சிறிது ஊற்றி, 6 நிமிடம் குறைவான தீயில் காளானை வேக வைக்க வேண்டும்.

காளானானது நன்கு வெந்ததும், அதில் சாதத்தைப் போட்டு, உப்பு சேர்த்து, மசாலா சாதத்தில் நன்கு ஒன்று சேரும் வரை 10 நிமிடம் நன்கு கிளறி விட்டு இறக்கினால், சுவையான காளான் மிளகு சாதம் ரெடி!!!

English summary

Mushroom Pepper Rice Recipe

Mushroom rice recipe is an easy pick for a lazy time. Here is how you prepare the yummy mushroom pepper rice recipe.
Story first published: Saturday, February 15, 2014, 12:27 [IST]
Desktop Bottom Promotion