For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காளான் பட்டாணி சப்பாத்தி

By Maha
|

பலருக்கு சப்பாத்தி விருப்பமான உணவாக இருக்கும். அந்த சப்பாத்தியில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் ஒரு வகை தான் காளான் மற்றும் பட்டாணி கொண்டு செய்யப்படும் வித்தியாசமான சுவையுடைய சப்பாத்தி. இந்த சப்பாத்தி செய்வது மிகவும் ஈஸியானது. மேலும் இது ஆரோக்கியமான ரெசிபியும் கூட. அதுமட்டுமின்றி, இதனை காலை அல்லது இரவு நேரங்களில் செய்வதற்கு ஏற்றதாக இருக்கும்.

சரி, இப்போது அந்த காளான் பட்டாணி சப்பாத்தியை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

Mushroom Peas Chapathy

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - 2 கப்
காளான் - 1/2 கப் (நறுக்கியது)
பன்னீர் - 5 டேபிள் ஸ்பூன் (துருவியது)
பச்சை பட்டாணி - 3 டேபிள் ஸ்பூன் (வேக வைத்தது)
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி - 1 டீஸ்பூன் (துருவியது)
தயிர் - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 3/4 கப்

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைய வேண்டும்.

எப்போது மாவானது சற்று கெட்டியாகிறதோ, அப்போது காளான், பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி சேர்த்து, கலவையை நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

பின்பு தயிர், பச்சை பட்டாணி, பன்னீர் மற்றும் உப்பு சேர்த்து, கலவை அனைத்தும் ஒன்று சேரும் வரை நன்கு பிசைய வேண்டும்.

பிறகு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடேற்ற வேண்டும்.

கல்லானது சூடாவதற்குள் பிசைந்து வைத்துள்ள மாவை சப்பாத்திகளாக தேய்த்துக் கொள்ள வேண்டும்.

பின் தேய்த்து வைத்துள்ள சப்பாத்திகளை தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் வேக வைத்து எடுக்க வேண்டும்.

இப்போது சூப்பரான காளான் பட்டாணி சப்பாத்தி ரெடி!!! இதனை கெட்சப் உடன் சேர்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும். இல்லாவிட்டால் விருப்பமான சட்னியுடன் சேர்த்து சாப்பிடுங்கள்.

English summary

Mushroom Peas Chapathy

If you want to make a variety chapathy, then this is the best recipe to try out. Take a look at the mushroom and peas chapathy recipe which is given below.
Story first published: Thursday, October 24, 2013, 17:45 [IST]
Desktop Bottom Promotion