For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காளான் சீஸ் பக்கோடா

By Maha
|

மாலையில் நன்கு சுவையான மற்றும் மொறுமொறுவென்று இருக்கும் ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டுமென்று தோன்றுகிறதா? அதிலும் வித்தியாசமான ஸ்நாக்ஸ் போன்று இருக்க வேண்டுமா? அதுமட்டுமின்றி, எளிமையான செய்முறை கொண்டதாக இருக்க வேண்டுமா? அப்படியெனில், அதற்கு காளான் சீஸ் பக்கோடா சரியானதாக இருக்கும்.

ஆம், இதன் செய்முறை வித்தியாசமானதாக இருந்தாலும், எளிமையானது. இப்போது அந்த காளான் சீஸ் பக்கோடாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Mushroom Cheese Pakoda: Evening Snack

தேவையான பொருட்கள்:

சீஸ் - 1/3 கப் (துருவியது)
காளான் - 15 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 4 (பொடியாக நறுக்கியது)
பூண்டு - 4 (தட்டியது)
கடலை மாவு - 1/3 கப்
சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்
பேக்கிங் சோடா - 1/2 டேபிள் ஸ்பூன்
பிரட் தூள் - 1 கப்
மிளகு - 1/2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பௌலில் துருவிய சீஸ், பூண்டு, உப்பு, மிளகு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

மற்றொரு பௌலில் கடலை மாவு, சோள மாவு, பேக்கிங் சோடா, உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் கலந்து கொள்ள வேண்டும்.

அடுத்து ஒவ்வொரு காளானை எடுத்துக் கொண்டு, அதிலுள்ள தண்டை நீக்கிவிட்டு, அதில் சீஸ் கலவையை வைத்து நிரப்பி, தனியாக தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், காளானை கலந்து வைத்துள்ள மாவில் நனைத்து, பிரட் தூளில் பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இதேப் போன்று அனைத்து காளானையும் பொரித்து எடுக்க வேண்டும்.

இப்போது சூப்பரான காளான் சீஸ் பக்கோடா ரெடி!!!

English summary

Mushroom Cheese Pakoda: Evening Snack

Mushroom Cheese Pakodas is one such snack recipe which will leave you wanting for more. Try this mushroom cheese pakoda recipe this evening and have it along with any sauce of your choice.
Story first published: Friday, August 2, 2013, 17:41 [IST]
Desktop Bottom Promotion