For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் சாம்பார்

By Maha
|

வெங்காயம், தக்காளி இல்லாமல் சாம்பார் செய்திருக்கமாட்டீர்கள். ஆனால் ஐயர் வீடுகளில் வெங்காயம், தக்காளி இல்லாமல் தான் பெரும்பாலும் சாம்பார் செய்து சாப்பிடுவார்கள். அது எப்படியென்று கேட்கிறீர்களா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள்.

ஏனெனில் இங்கு ஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் சாம்பார் ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து, எப்படி உள்ளது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Murungakkai/Drumstick Sambar: Iyer Style

தேவையான பொருட்கள்:

முருங்கைக்காய் - 3 (துண்டுகளாக வெட்டியது)
துவரம் பருப்பு - 1/3 கப்
புளி - 1 சிறிய நெல்லிக்காய் அளவு
சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

தாளிப்பதற்கு...

எண்ணெய் - 2 1/2 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

முதலில் துவரம் பருப்பை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் புளியை 1 கப் சுடுநீரில் ஊற வைத்து, சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் குக்கரில் துவரம் பருப்பை கழுவிப் போட்டு, அத்துடன் மஞ்சள் தூள் சிறிது சேர்த்து மூடி அடுப்பில் வைத்து, 3 விசில் விட்டு இறக்கி, நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

பின் அதில் முருங்கைக்காயைப் போட்டு, 1 நிமிடம் வதக்கி, பின் அதில் சாம்பார் பொடி, தேவையான அளவு உப்பு, மஞ்சுள் தூள் சிறிது சேர்த்து 1 நிமிடம் கிளறி, 3/4 கப் தண்ணீர் ஊற்றி, முருங்கைக்காயை வேக வைக்க வேண்டும்.

முருங்கைக்காயானது முக்கால் பதம் வெந்ததும், அதில் 1 கப் புளிச்சாறு சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கொதிக்க விட வேண்டும். அதற்குள் முருங்கைக்காயும் நன்கு வெந்துவிடும்.

இறுதியில் அதில் மசித்து வைத்துள்ள பருப்பை சேர்த்து, 1/2 கப் தண்ணீர் ஊற்றி, 5-6 நிமிடம் மிதமான தீயில் பச்சை வாசனை போக கொதிக்க விட்டு இறக்கினால், ஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் சாம்பார் ரெடி!!!

English summary

Murungakkai/Drumstick Sambar: Iyer Style

Do you know how to prepare a typical Tamil Brahmin sambar (iyer style)? Today we will learn how to make drumstick sambar or murungakkai sambar.
Story first published: Tuesday, July 7, 2015, 12:43 [IST]
Desktop Bottom Promotion