For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெஜிடேபிள் சீஸ் பாஸ்தா

By Maha
|

மாலையில் வீட்டிற்கு போனதும், பசியை ஆரோக்கியமான முறையில் போக்க வேண்டுமானால், மாலை வேளையில் ஸ்நாக்ஸ் போன்று சாப்பிடுவதற்கு ஏற்றவாறான பாஸ்தாவை செய்து சாப்பிடுங்கள். அதிலும் பாஸ்தாவை செய்ய ஆரம்பிக்கும் போது, அதில் காய்கறிகள் மற்றும் சீஸ் சேர்த்து செய்தால், பாஸ்தா இன்னும் அருமையாக இருக்கும்.

இங்கு காய்கறிகள் மற்றும் சீஸ் சேர்த்து செய்யப்படும் பாஸ்தாவை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

Mouthwatering Veggie Cheese Pasta

தேவையான பொருட்கள்:

பாஸ்தா - 2 கப் (வேக வைத்தது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
குடைமிளகாய் - 1 (நறுக்கியது)
செலரி - 1 டேபிள் ஸ்பூன்
காய்கறிகள் (கேரட், பட்டாணி, தக்காளி, பீன்ஸ்) - 1 கப் (வேக வைத்தது)
பால் - 1/2 கப்
சீஸ் - 1 கப் (துருவியது)
உலர்ந்த மூலிகைகள் - 1/2 டீஸ்பூன்
வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகு தூள் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் சேர்த்து உருகியதும், நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் செலரியை சேர்த்து கிளறி, பின் காய்கறிகளைப் போட்டு கிளறி விட வேண்டும்.

வெங்காயமானது பொன்னிறமானதும், அதில் நறுக்கி வைத்துள்ள குடைமிளகாய் சேர்த்து கிளறி விடவும்.

அடுத்து, அதில் பால் மற்றும் சீஸ் சேர்த்து கிளறி, பாலானது கொதிக்க ஆரம்பிக்கும் போது, உலர்ந்த மூலிகைகள், மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி, சிறிது நேரம் தட்டு கொண்டு மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.

இறுதியில் பாஸ்தாவை சேர்த்து, 5-6 நிமிடம் வேக வைத்து இறக்கினால், சுவையான வெஜிடேபிள் சீஸ் பாஸ்தா ரெடி!!!

English summary

Mouthwatering Veggie Cheese Pasta

Vegetable cheese pasta recipe is simple and quick. Follow the steps to cook the yummy vegetable cheese pasta.
Story first published: Friday, March 7, 2014, 16:12 [IST]
Desktop Bottom Promotion