For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சத்தான... பாசிப்பருப்பு ஓட்ஸ் ரெசிபி

By Maha
|

தற்போது பெரும்பாலானோரின் காலை உணவாக ஓட்ஸ் தான் உள்ளது. மேலும் நிறைய மக்கள் ஓட்ஸை பாலில் சேர்த்து தான் சாப்பிடுவார்கள். ஆனால் ஓட்ஸை பருப்புக்களுடன் சேர்த்து கூட சாப்பிடலாம். அதிலும் காலை வேளையில் சாப்பிட்டால், உடலுக்கு வேண்டிய சத்துக்களானது கிடைத்து, உடல் நன்கு வலிமையுடனும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

இங்கு பருப்புக்களில் ஒன்றான பாசிப்பருப்பு மற்றும் ஓட்ஸ் கொண்டு எப்படி சத்தான காலை உணவு சமைப்பது என்று பார்ப்போம்.

Moong Dal Oats Recipe

தேவையான பொருட்கள்:

பாசிப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
ஓட்ஸ் - 2 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)
கொத்தமல்லி - சிறிது
புதினா - சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் பாசிப்பருப்பை கழுவிப் போட்டு, அத்துடன் ஓட்ஸையும் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, 3-4 விசில் விட்டு இறக்க வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.

பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து கிளறி, பின் மஞ்சள் தூள், கரம் மசாலா, தக்காளி மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும்.

பிறகு அதில் கொத்தமல்லி மற்றும் புதினா சேர்த்து வதக்கி, பின் அதில் குக்கரில் வேக வைத்துள்ள பருப்பு மற்றும் ஓட்ஸ் கலவையை சேர்த்து 5 நிமிடம் தீயை குறைவில் வைத்து ஓரளவு கெட்டியாகும் வரை அடுப்பில் வைத்து இறக்கினால், சுவையான பாசிப்பருப்பு ஓட்ஸ் ரெசிபி ரெடி!!!

English summary

Moong Dal Oats Recipe

Today is one such healthy option for breakfast made with Oats & Moong dal. It is very easy to prepare in the morning time. Check out the recipe and give it a try.
Story first published: Tuesday, February 4, 2014, 19:18 [IST]
Desktop Bottom Promotion