For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பாசிப்பருப்பு கடி ரெசிபி

By Maha
|

வட இந்தியாவில் மிகவும் பிரபலமான ஒரு ரெசிபி தான் கடி. இது சைவ உணவாளர்களுக்கு ஒரு சிறப்பான மற்றும் சுவையான ரெசிபி. சிலர் விரத நாட்களில் வெங்காயம், பூண்டு போன்றவற்றை பயன்படுத்தமாட்டார்கள். அத்தகையவர்களுக்கு இந்த பாசிப்பருப்பு கடி ரெசிபி ஒரு சிம்பிளான மற்றும் ஈஸியான ரெசிபியாக இருக்கும்.

சொல்லப்போனால் இந்த ரெசிபி தென்னிந்தியாவில் செய்யப்படும் வடைக்கறி போன்றது தான். ஆனால் இதில் வெங்காயம், பூண்டு எதுவும் சேர்க்காமல் செய்யப்படுவதால், இதனை ஒரு விரத உணவு என்றும் சொல்லலாம். சரி, இப்போது அந்த பாசிப்பருப்பு கடி ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Moong Dal Kadhi Recipe

தேவையான பொருட்கள்:

பாசிப்பருப்பு - 1 1/2 கப்
தயிர் - 2 கப்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
சீரகம் - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - 2 கப்

செய்முறை:

முதலில் பாசிப்பருப்பை நீரில் 3 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதனை நன்கு கழுவி, கெட்டியான பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து அந்த பேஸ்ட்டை பாதியாக பிரித்து, ஒரு பாதியில், உப்பு, பச்சை மிளகாய் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி சேர்த்து கலந்து. சிறு உருண்டைகளாக்கிக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தீயை குறைவில் வைத்து, அந்த உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்து, ஒரு பேப்பர் டவலில் வைக்க வேண்டும்.

பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, தயிரை அடித்து ஊற்றி, மீதமுள்ள அரைத்த பாசிப்பருப்பை போட்டு, 2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும்.

பின் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து, 15-20 நிமிடம் தீயை குறைவில் வைத்து கொதிக்க விட்டு, பொரித்து வைத்துள்ளவற்றை போட்டு, 10 நிமிடம் வேக வைத்து இறக்கி, கொத்தமல்லியை தூவி பரிமாறினால், சூப்பரான பாசிப்பருப்பு கடி ரெசிபி ரெடி!!!

English summary

Moong Dal Kadhi Recipe

Kadhi is one of the favourite North-Indian recipes. It is an excellent option for the vegetarians. Some Hindus, abstain from eating even onions and garlic during this month. So, here is a simple yet lip-smacking vegetarian recipe. So, try out moong dal kadhi recipe at home and enjoy a delicious vegetarian treat.
Desktop Bottom Promotion