For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மொச்சை குழம்பு

By Maha
|

கிராமப்புறங்களில் செய்யப்படும் மொச்சை குழம்பு நிறைய பேருக்கு மிகவும் இஷ்டமானதாக இருக்கும். அதிலும் இந்த குழம்பிற்கு அரைக்கப்படும் மசாலாவை அம்மியில் அரைத்து செய்தால், அதன் சுவைக்கு இணை வேறு எதுவும் வராது. உங்களுக்கு மொச்சை குழம்பை எப்படி செய்வதென்று தெரியாதா?

அப்படியானால் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் இங்கு மிகவும் ஈஸியான, அதே சமயம் மிகுந்த சுவையுடன் இருக்கும் மொச்சை குழம்பை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து செய்து பார்த்து எப்படி இருந்தது என்று சொல்லுங்கள்.

Mochai Kuzhambu Recipe

தேவையான பொருட்கள்:

உலர்ந்த மொச்சை - 3/4 கப்
புளி - 1 எலுமிச்சை அளவு
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

வறுத்து அரைப்பதற்கு...

எண்ணெய் - 1 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 1/4 கப்
தக்காளி - 1
பூண்டு - 5 பற்கள்
மல்லி - 1 டீஸ்பூன்
தேங்காய் - 1/4 கப்
சோம்பு - 1 டீஸ்பூன்

தாளிப்பதற்கு...

கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது
சின்ன வெங்காயம் - 8
தக்காளி - 1/2
பூண்டு - 4 பற்கள்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் மொச்சையை இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். புளியை வெதுவெதுப்பான நீரில் ஊற வைத்து, சற்று கெட்டியாக சாறு எடுத்துக் கொள்ளவும்.

பின்பு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் மொச்சையை நன்கு கழுவி போட்டு, தண்ணீர் ஊற்றி, 5-6 விசில் விட்டு இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கி இறக்கி, குளிர வைக்க வேண்டும்.

பின் அதனை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து மற்றொரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து நன்கு வதக் வேண்டும்.

பின் அதில் வேக வைத்துள்ள மொச்சையை நீருடன் சேர்த்து, அத்துடன் புளிச்சாற்றினை ஊற்றி, உப்பு சேர்த்து, 3 நிமிடம் நன்கு பச்சை வாசனை போக கொதிக்க விட வேண்டும்.

பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, அத்துடன் மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து, தேவையானால் உப்பு சேர்த்து, 1/2 கப் தண்ணீர் ஊற்றி, 5-10 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்கினால், மொச்சை குழம்பு ரெடி!!!

English summary

Mochai Kuzhambu Recipe

Mochai Kuzhambu is a Spicy flavourful curry made with field beans pairs up with steamed rice.
Story first published: Monday, August 18, 2014, 12:45 [IST]
Desktop Bottom Promotion