For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஓணம் ஸ்பெஷல்: வெஜிடேபிள் தியல் ரெசிபி

By Maha
|

உணவுகள் என்று வரும் போது, கேரளா உணவுகள் மட்டும் விதிவிலக்கல்ல. கேரளா ஸ்டைல் உணவுகள் மிகவும் சுவையானதாக இருப்பதோடு, உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரக்கூடியதாகவும் இருக்கும். அந்த வகையில் இப்போது ஓணம் ஸ்பெஷல் ரெசிபியான கேரளாவில் பிரபலமான வெஜிடேபிள் தியல் ரெசிபியைக் கொடுத்துள்ளோம்.

இந்த ரெசிபியில் பல்வேறு வகையான காய்கறிகளை சேர்த்து செய்வதால், உடலுக்கு மிகவும் சத்துள்ள உணவாகவும் இருக்கும். சரி, இப்போது அந்த ரெசிபியின் செய்முறையைப் பார்ப்போமா!!!

Mixed Vegetable Theeyal

தேவையான பொருட்கள்:

கேரட் - 1 (நறுக்கியது)
முருங்கைக்காய் - 2 (நறுக்கியது)
கத்திரிக்காய் - 2 (நறுக்கியது)
பாகற்காய் - 1 (நறுக்கியது)
வெங்காயம் - 1
தேங்காய் - 1/2 கப் (துருவியது)
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
வெந்தயம் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
புளிச் சாறு - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 3
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - 1 1/2 கப்

செய்முறை:

முதலில் காய்கறிகளை கழுவி, அதனை குக்கரில் போட்டு, 1/2 கப் தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து, 1 விசில் விட்டு இறக்கி, குளிர வைக்க வேண்டும்.

காய்கறிகளானது குளிர்ந்ததும், அதனை ஒரு பௌலில் போட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காயைப் போட்டு லேசாக வறுக்க வேண்டும். பிறகு அதில் வெந்தயம், மல்லி தூள் ஆகியவற்றிப் போட்டு 2 நிமிடம் தீயை குறைவில் வைத்து வறுத்து, இறக்கி குளிர வைக்க வேண்டும்.

அடுத்து வறுத்த பொருட்களை மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம் சேர்த்து 3-4 நிமிடம் வதக்க வேண்டும்.

பிறகு வேக வைத்துள்ள காய்கறிகளைப் போட்டு, மீண்டும் 3-4 நிமிடம் வதக்க வேண்டும்.

அடுத்து அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையைப் போட்டு, தீயை குறைவில் வைத்து, 5-6 நிமிடம் கிளறி விட வேண்டும்.

பின் புளிச் சாறு, உப்பு, 1/2 கப் தண்ணீர் ஊற்றி, 5 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும்.

மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்து, காய்கறி கலவையில் ஊற்றி கிளறி, ஒரு கொதி விட்டு இறக்க வேண்டும்.

இப்போது சூப்பரான வெஜிடேபிள் தியல் ரெடி!!! இதனை சாதத்துடன் சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.

English summary

Mixed Vegetable Theeyal

Curries have always been a special part of Indian cuisine. Kerala dishes are no exception. So, here we have a delicious and mouthwatering vegetarian recipe of mixed vegetable Theeyal which is sure to take your taste-buds on a delightful ride.
Story first published: Wednesday, September 11, 2013, 11:56 [IST]
Desktop Bottom Promotion