For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெந்தயக்கீரை பட்டாணி மலாய் ரெசிபி

By Neha Mathur
|

வீட்டிற்கு விருந்தினர்கள் வரும் போது அவர்களை அசத்த வேண்டுமா? அப்படியானால் வெந்தயக்கீரை மற்றும் பட்டாணி கொண்டு செய்யப்படும் ஒரு அருமையான ரெசிபியை செய்யுங்கள். பொதுவாக வெந்தயக்கீரை கசப்பாக இருக்கும். ஆனால் இந்த ரெசிபியில் வெந்தயக்கீரையின் கசப்பை நீரில் வேக வைத்து எடுத்துவிட்டு செய்வதால், இந்த ரெசிபியை குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

அதுமட்டுமின்றி இது பட்டாணி சீசன் என்பதால், விலை மலிவாக கிடைக்கும். சரி, இப்போது ரெசிபிக்கு போகலாமா!!!

Methi Matar Malai Recipe

தேவையான பொருட்கள்:

வெந்தயக்கீரை - 2 கப் (நறுக்கியது)
பட்டாணி - 1 கப்
வெங்காயம் - 1 கப் (நறுக்கியது)
முந்திரி - 1/2 கப்
தக்காளி - 1 (பெரியது, நறுக்கியது)
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)
பச்சை ஏலக்காய் - 3
பட்டை - 1 இன்ச்
உப்பு - தேவையான அளவு
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
கிச்சன் கிங் மசாலா - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
கோயா - 50 கிராம் (துருவியது)
பிரஷ் க்ரீம் - 1/2 கப்
எலுமிச்சை - 1/2 (சாறு எடுத்துக் கொள்ளவும்)

செய்முறை:

முதலில் வெந்தயக் கீரையை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும். தண்ணீரானது கொதித்ததும், அதில் வெந்தயக் கீரை மற்றும் பட்டாணியை சேர்த்து 2 நிமிடம் வேக வைத்து இறக்க வேண்டும்.

பின் தண்ணீரை வடிகட்டிவிட்டு, கீரை மற்றும் பட்டாணியை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து வெங்காயத்தை தண்ணீரில் போட்டு, 5 நிமிடம் வேக வைத்து இறக்கி, பின் வெங்காயத்தை மிக்ஸியில் போட்டு, அத்துடன் முந்திரி மற்றும் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பச்சை மிளகாய், ஏலக்காய், பட்டை சேர்த்து தாளித்து, பின் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து, 1/2 கப் தண்ணீர் ஊற்றி 3-4 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

பிறகு உப்பு, மிளகாய் தூள், கிச்சன் கிங் மசாலா, கரம் மசாலா மற்றும் கோயா சேர்த்து, 1 கப் தண்ணீர் ஊற்றி மீண்டும் 2-3 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

பின்னர் அத்துடன் வேக வைத்துள்ள வெந்தயக்கீரை மற்றும் பட்டாணியை சேர்த்து, சிறிது நேரம் வதக்கி, பிரஷ் க்ரீம் மற்றும் சர்க்கரை சேர்த்து கிளறி, 2 நிமிடம் வேக வைத்து இறக்கி, எலுமிச்சை சாறு ஊற்றினால், சுவையான வெந்தயக்கீரை பட்டாணி மலாய் ரெடி!!!

English summary

Methi Matar Malai Recipe

Looking for some interesting recipe to make when you have guests at home or want to celebrate something special with a delicious home cooked meal. This recipe of methi matar and malai could be a good addition in your cookbook. Here is the recipe.
Story first published: Saturday, November 16, 2013, 11:28 [IST]
Desktop Bottom Promotion