For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மீல் மேக்கர் மசாலா

By Maha
|

பொதுவாக மீல் மேக்கரை பிரியாணியில் சேர்த்து தான் சாப்பிடுவோம். ஆனால் அந்த மீல் மேக்கரை மதிய வேளையில் சாதத்திற்கு, மசாலாவாக செய்து கூட சாப்பிடலாம். ஆம், இது சற்று வித்தியாசமான மற்றும் சுவையான ஒரு ரெசிபி. மேலும் அனைவருக்கும் பிடித்ததாகவும் இருக்கும்.

ஆகவே இன்று மதியம் ஏதாவது ஒரு வித்தியாசமான ரெசிபி செய்ய நினைப்போருக்கு இது சரியானதாக இருக்கும். அந்த மீல் மேக்கர் மசாலாவை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து செய்து பார்த்து, சுவை எப்படி இருந்தென்று சொல்லுங்கள்.

Meal Maker Masala With Coconut Milk

தேவையான பொருட்கள்:

மீல் மேக்கர் - 250 கிராம்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டேபிள் ஸ்பூன்
சீரகப் பொடி - 1/2 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
தேங்காய் பால் - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - 1 1/2 கப் (வெதுவெதுப்பானது)
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)

செய்முறை:

முதலில் மீல் மேக்கரை வெதுவெதுப்பான நீரில் 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் நீரை வடித்து விட்டு, மீல் மேக்கரை பிழிந்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம் சேர்த்து தீயை குறைவில் வைத்து, 3-4 நிமிடம் வதக்கி விட வேண்டும்.

பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

அடுத்து நறுக்கிய தக்காளியை சேர்த்து, மீண்டும் 2 நிமிடம் வதக்கி விட வேண்டும்.

பின் மஞ்சள் தூள், சீரகப் பொடி, மல்லி தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

இப்போது மீல் மேக்கர், தேங்காய் பால் மற்றும் உப்பு சேர்த்து, 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

மசாலாவானது நன்கு கொதித்ததும், தீயை அணைத்துவிட்டு, அதன் மேல் கொத்தமல்லியைத் தூவினால், அருமையான மீல் மேக்கர் மசாலா ரெடி!!!

English summary

Meal Maker Masala With Coconut Milk

This spicy and delicious vegetarian recipe is sure to please all age groups alike. So, prepare this simple recipe of meal maker masala with coconut milk and enjoy a lip-smacking vegetarian meal at your home.
Story first published: Thursday, May 30, 2013, 11:41 [IST]
Desktop Bottom Promotion