For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மைசூர் பருப்பு சாம்பார்

By Maha
|

இந்திய உணவுகளில் பருப்புக்கள் மிகவும் இன்றியமையாதது. அதுமட்டுமின்றி, பருப்புக்களில் உடலுக்கு வேண்டிய பல சத்துக்களானது நிறைந்துள்ளது. பொதுவாக பருப்புக்களில், துவரம் பருப்பு கொண்டு தான் சாம்பார் செய்வோம். ஆனால் எப்போதும் அந்த பருப்பைக் கொண்டே சமைத்து சாப்பிட்டால், போர் அடித்துவிடும். எனவே அவ்வப்போது, வேறு சில பருப்புக்களையும் சமைத்து சாப்பிட வேண்டும்.

அந்த வகையில், இப்போது மைசூர் பருப்பைக் கொண்டு எளிமையான முறையில், விருப்பமான சில காய்கறிகளை சேர்த்து எப்படி சுவையான சாம்பார் செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

மைசூர் பருப்பு - 1 கப்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
காலிஃப்ளவர் - 1 (சிறியது மற்றும் நறுக்கியது)
உருளைக்கிழங்கு - 2 (நறுக்கியது)
முருங்கைக் காய் - 1 (துண்டுகளாக்கப்பட்டது)
பச்சை பட்டாணி - 1/2 கப்
பீன்ஸ் - 5-6 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
கடுகு - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 2
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி - 1 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - 2 கப்

செய்முறை:

முதலில் மைசூர் பருப்பை நீரில் ஊற வைத்து, நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, பெருங்காயத் தூள், வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, வெங்காயத்தைப் போட்டு தீயை குறைவில் வைத்து, 5-6 நிமிடம் வதக்க வேண்டும்.

பின் இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை ஒவ்வொன்றாக சேர்த்து, 5-6 நிமிடம் வதக்கி விட வேண்டும்.

பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து 3 நிமிடம் கிளறி, தக்காளி மற்றும் சர்க்கரை சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.

அடுத்து கழுவி வைத்துள்ள மைசூர் பருப்பைப் போட்டு, தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்க வேண்டும்.

விசிலானது போனதும் குக்கரைத் திறந்து, எலுமிச்சை சாறு மற்றும் கொத்தமல்லியைத் தூவி கிளறி பரிமாறினால், சூப்பரான மைசூர் பருப்பு சாம்பார் ரெடி!!!

English summary

Masoor Dal Vegetable Sambar Recipe

Dal is an important part of everyday Indian meals. Thankfully, we know about various techniques and recipes to cook dal. Otherwise eating the same dal everyday would have been a boring affair. So, try out this simple and quick masoor dal vegetable recipe and add a twist to your meals.
Desktop Bottom Promotion